ஜிந்துப்பிட்டி துப்பாக்கிச் சூடு: குற்றவாளிகளுக்கு உதவிய சந்தேகநபர் கைது !

11 Mar, 2026 | 09:44 AM
image

கடந்த ஜனவரி மாதம் ஜிந்துப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கு உடந்தையாக இருந்தமை மற்றும் குற்றவாளிகளுக்கு உதவியமை தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கொழும்பு மத்திய பிரிவு குற்றப்புலனாய்வு  பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் கொழும்பு 12 பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கடந்த ஜனவரி 16 ஆம் திகதி கடற்கரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜிந்துப்பிட்டி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் கொல்லப்பட்டதுடன், இரண்டு சிறுவர்கள் காயமடைந்திருந்தனர். இச்சம்பவம் தொடர்பில் பல பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்து வந்தன.

செவ்வாய்க்கிழமை  (10) மாலை வாழைத்தோட்டம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  பகுதியொன்றில் கொழும்பு மத்திய பிரிவு குற்றப்புலனாய்வு பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து முன்னெடுக்கப்பட்ட சோதனையில் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து  குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட முச்சக்கர வண்டி, போலி இலக்கத் தகடுகள் பொருத்தப்பட்ட மோட்டார் சைக்கிள், போலி வருமான வரி அனுமதிப்பத்திரம் மற்றும் இரண்டு மேலதிக இலக்கத் தகடுகள் என்பன பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கொழும்பு மத்திய பிரிவு குற்ற விசாரணைப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், சந்தேகநபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடலில் தத்தளித்த படகொன்றை கரைக்கு கொண்டுவந்த...

2026-04-21 03:56:36
news-image

மே தினக் கூட்டம்: சஜித்திடமிருந்து அழைப்பு...

2026-04-20 16:09:35
news-image

பௌத்த எழுச்சி வட கிழக்கிற்கே அவசியம்...

2026-04-20 17:07:10
news-image

இலங்கை திரும்ப விரும்புவோருக்கான ஒத்துழைப்புக்களை துரிதப்படுத்துங்கள்...

2026-04-20 16:39:59
news-image

நிலக்கரியைப் பால் ஊற்றி வெளுப்பாக்க அரசாங்கம்...

2026-04-20 16:40:28
news-image

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் முழுமையாக அரசியல்மயமாகியுள்ளது...

2026-04-20 17:07:36
news-image

மாகாண சபைத் தேர்தலைத் தள்ளிப்போடும் அரசாங்கம்!...

2026-04-20 17:33:18
news-image

தேசிய கல்வி நிறுவனத்தின் புதிய பணிப்பாளர்...

2026-04-20 21:58:19
news-image

இலங்கை மத்திய வங்கியின் 'வருடாந்த பொருளாதார...

2026-04-20 19:50:09
news-image

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு...

2026-04-20 19:34:33
news-image

மிஹிந்தலையில் பெண்களைத் தாக்கிய விமானப்படை வீரர்...

2026-04-20 17:50:02
news-image

வலுசக்தி அமைச்சராக அநுர கருணாதிலக்க ஜனாதிபதி...

2026-04-20 17:37:55