இலங்கைக் கடற்பரப்பில் கடல்சார் அறிவியல் ஆய்வை முன்னெடுக்க ஐநா ஆராய்ச்சி கப்பல் வருகை!

11 Mar, 2026 | 12:16 PM
image

ஐக்கிய நாடுகள் சபையின் கொடியுடன் கூடிய நவீன கடல் ஆராய்ச்சி கப்பலான R/V Dr. Fridtjof Nansen இன்று புதன்கிழமை (11) கொழும்பை வந்தடைந்தடைய உள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையின் பிரத்யேகப் பொருளாதார வலயத்தில் பாரிய கடல் சார் ஆய்வுகளை மேற்கொள்வதற்காகவே இந்த கப்பல் வருகை தரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் அழைப்பை ஏற்று, ஐநா உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO), இலங்கை மீன்பிடி அமைச்சு மற்றும் தேசிய நீரியல் வள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகவர் நிலையம் (NARA) ஆகியவற்றுடன் இணைந்து இந்த 32 நாள் ஆய்வை முன்னெடுக்கின்றது.

இந்த ஆராய்ச்சிப் பயணம் இலங்கையின் கடல் வளங்கள் மற்றும் சூழல்தொகுதிகள் தொடர்பில் மிக முக்கியமான தரவுகளைச் சேகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஹைட்ரோ-அகௌஸ்டிக் (Hydro-acoustic) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கடல் மட்டத்திற்குக் கீழே உள்ள மீன்களின் அளவு மற்றும் அவை பரவியுள்ள இடங்கள் கணக்கிடப்படும்.

கடலில் கலந்துள்ள பிளாஸ்டிக் மற்றும் ஏனைய இரசாயனக் கழிவுகள் தொடர்பில் ஆய்வுகள் முன்னெடுக்கப்படும்.

கடல் வாழ் உயிரினங்களின் பல்லுயிர்த்தன்மை மற்றும் அரிதான இனங்கள் குறித்துக் கண்காணிக்கப்படும்.

சர்வதேச காலநிலை மாற்றம் இலங்கையைச் சூழவுள்ள கடல் சூழலை எவ்வாறு பாதித்துள்ளது என்பது தொடர்பில் ஆராயப்படும்.

இந்த ஆய்வின் மூலம் கிடைக்கும் தரவுகள், இலங்கையின் நிலையான மீன்பிடி முகாமைத்துவம் மற்றும் கடல்சார் கொள்கைகளை வகுக்க பெரும் உதவியாக அமையும். அத்துடன், நாரா நிறுவனத்தின் இளம் விஞ்ஞானிகளுக்குச் சர்வதேச நிபுணர்களுடன் இணைந்து பணியாற்றும் மற்றும் நவீன தொழில்நுட்பங்களைக் கற்கும் வாய்ப்பும் (Capacity Building) வழங்கப்படவுள்ளது.

2018 ஆம் ஆண்டும் R/V Dr. Fridtjof Nansen கப்பல் நாட்டுக்கு வருகை தந்து தேசிய நிறுவனங்களுடன் இணைந்து  நாட்டின் கண்ட அடுக்கு மற்றும் மேல் சாய்வு பற்றிய விரிவான ஆய்வை நடத்தியது. 

அத்துடன், 1978 மற்றும் 1980 க்கு இடையில் இலங்கை கடல்பரப்பில் நான்சன் ஆய்வுகள் பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை, இந்த நீண்டகால சர்வதேச கூட்டாண்மையை வெளிப்படுத்துகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கோடாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!

2026-04-12 08:21:17
news-image

மின்சாரம் தாக்கி ஒருவர் பலி!

2026-04-12 07:48:35
news-image

நபர் ஒருவர் கொலை: சந்தேகநபர் கைது!

2026-04-12 07:38:37
news-image

பூஸா சிறைச்சாலையிலிருந்த 07 முக்கிய பாதாள...

2026-04-12 07:19:46
news-image

நிலக்கரி இறக்குமதி முறைகேடு குறித்த விசாரணை:...

2026-04-12 06:28:35
news-image

இன்றைய வானிலை : சூரியன் உச்சம்...

2026-04-12 06:23:51
news-image

தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிகளை அளவீடு...

2026-04-11 17:27:25
news-image

மார்ச் மாதத்தில் வெளிநாட்டுப் பணியாளர்களால் இலங்கைக்கு...

2026-04-11 17:08:17
news-image

தையிட்டி காணி விடுவிப்பு தொடர்பான கலந்துரையாடல்!

2026-04-11 17:35:29
news-image

மேற்காசியாவில் தற்காலிக போர்நிறுத்தம் : இலங்கை...

2026-04-11 15:36:16
news-image

உரம் குறித்து விவசாயிகள் அச்சமடையத் தேவையில்லை...

2026-04-11 14:59:19
news-image

சுகாதார சேவையை வலுப்படுத்த 154 பேருக்கு...

2026-04-11 14:24:49