உள்நாட்டு நிர்வாகத் தவறுகளை மத்திய கிழக்கு மோதலுக்கு சுமத்த வேண்டாம் – ஜி.எல்.பீரிஸ்

Published By: Vishnu

11 Mar, 2026 | 05:43 AM
image

(இராஜதுரை ஹஷான்)

தவறான நிர்வாகத்தினால் ஏற்பட்டுள்ள சிக்கல்களை அரசாங்கம் மத்திய கிழக்கில் தற்போது தோற்றம் பெற்றுள்ள மோதல் மீது சுமத்தி விட்டு பொறுப்பில் இருந்து விலக முயற்சிக்கிறது. அரசியல் நோக்கமின்றிய வகையில் எதிர்க்கட்சிகள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என முன்னாள் வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான உதய கம்மன்பில, நிமல் சிறிபாலடி சில்வா, லசந்த அழகியவன்ன, ஜீ.எல்.பீரிஸ், அனுர பிரியதர்ஷன யாப்பா உட்பட சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து கலந்துரையாடினார்கள்.

இந்த கலந்துரையாடிலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஜி.எல்.பீரிஸ்,

மத்திய கிழக்கு  நாடுகளில் தோற்றம் பெற்றுள்ள மோதல் நிலைமையை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள அரசாங்கம் முயற்சிக்கிறது. அரசாங்கத்தின் தவறான நிர்வாகத்தினால் ஏற்பட்டுள்ள நெருக்கடியின் பொறுப்பில் இருந்து விலகுவதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது.

நடுத்தர மக்களை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் தற்போது எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் சமூகக்கட்டமைப்பில் ஏற்படும் விளைவுகளை அரசாங்கம் ஆராயவில்லை.

தற்போதைய இக்கட்டான நிலையில் சகல எதிர்க்கட்சிகளும் அரசியலுக்கு அப்பாற்பட்ட வகையில் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறோம். எதிர்க்கட்சிகள் வலுவாக செயற்பட்டால் தான் அரசாங்கத்தை சிறந்த முறையில் வழிநடத்தலாம். ஆகவே சகல எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மே தினக் கூட்டம்: சஜித்திடமிருந்து அழைப்பு...

2026-04-20 16:09:35
news-image

பௌத்த எழுச்சி வட கிழக்கிற்கே அவசியம்...

2026-04-20 17:07:10
news-image

இலங்கை திரும்ப விரும்புவோருக்கான ஒத்துழைப்புக்களை துரிதப்படுத்துங்கள்...

2026-04-20 16:39:59
news-image

நிலக்கரியைப் பால் ஊற்றி வெளுப்பாக்க அரசாங்கம்...

2026-04-20 16:40:28
news-image

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் முழுமையாக அரசியல்மயமாகியுள்ளது...

2026-04-20 17:07:36
news-image

மாகாண சபைத் தேர்தலைத் தள்ளிப்போடும் அரசாங்கம்!...

2026-04-20 17:33:18
news-image

தேசிய கல்வி நிறுவனத்தின் புதிய பணிப்பாளர்...

2026-04-20 21:58:19
news-image

இலங்கை மத்திய வங்கியின் 'வருடாந்த பொருளாதார...

2026-04-20 19:50:09
news-image

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு...

2026-04-20 19:34:33
news-image

மிஹிந்தலையில் பெண்களைத் தாக்கிய விமானப்படை வீரர்...

2026-04-20 17:50:02
news-image

வலுசக்தி அமைச்சராக அநுர கருணாதிலக்க ஜனாதிபதி...

2026-04-20 17:37:55
news-image

யாழ். கட்டளைத் தளபதிக்கும் அரசாங்க அதிபருக்கும்...

2026-04-20 17:32:54