மத்திய கிழக்கு போர் சூழல்; பாதிப்புக்கள் குறித்து ஆராய பொருளாதாரக் கண்காணிப்புக் குழு

Published By: Vishnu

11 Mar, 2026 | 05:40 AM
image

(எம்.மனோசித்ரா)

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவுகின்ற போர் நிலைமையால் ஏற்படக் கூடிய பாதிப்புக்கள் தொடர்பில் ஆராய்வதற்கு பொருளாதாரக் கண்காணிப்புக் குழுவை நிறுவ அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

தற்போது மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவுகின்ற போர் நிலைமையால் பொருளாதாரத்திற்குப் பாதிப்புக்களை ஏற்படுத்தக் கூடியவாறு உலகளாவிய ரீதியில் உறுதிப்பாடற்ற சூழல் உருவாகியுள்ளது.

மிகவும் சிறிய திறந்த பொருளாதாரத்தைக் கொண்டுள்ள நாடாக இலங்கை வலுசக்தி இறக்குமதி, மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரிகின்ற புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் கிடைக்கின்ற பண அனுப்பல்கள் மற்றும் அப்பிராந்தியத்துடன் ஏற்படுத்திக் கொண்டுள்ள வர்த்தகம் மற்றும் முதலீட்டுத் தொடர்புகளில் தங்கியிருப்பதால், வெளிப்புற பொருளாதார அதிர்ச்சிகளுக்கு ஆளாக வேண்டியுள்ளது.

இந்நிலைமையில் இலங்கை பொருளதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கங்களைத் தொடர்ச்சியாகக் கண்காணித்தல், பல்வேறு துறைகளில் ஏற்படக்கூடிய இடர்களை மதிப்பீடு செய்தல் மற்றும் நிலைமையைத் தொடர்ந்து மீளாய்வு செய்து, அதற்கமைய மேற்கொள்ள வேண்டிய கொள்கை நடவடிக்கைகள் தொடர்பாக அமைச்சரவைக்கு விதந்துரைகளை சமர்ப்பிப்பதற்காக நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சராக தொழில் அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோவின் தலைமையிலும் மற்றும் ஏற்புடைய நிறுவனங்களின் பிரதானிகள் மற்றும் துறைசார் நிபுணர்களுடன் கூடிய பொருளாதாரக் கண்காணிப்புக் குழுவை நியமிப்பதற்காக ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பயணிகள் பஸ்ஸில் மண்ணெண்ணெய் கடத்தல்: நடத்துனர்...

2026-04-20 10:46:52
news-image

புத்தாண்டு காலத்தில் மாகும்புர மத்திய நிலையத்தை...

2026-04-20 10:46:31
news-image

பாடசாலைகளின் இரண்டாம் தவணை ஆரம்பம் :...

2026-04-20 10:36:54
news-image

இந்திய வம்சாவளி தமிழர்களுக்கான வீடமைப்பு திட்டத்தை...

2026-04-20 10:43:59
news-image

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு: 608...

2026-04-20 10:11:35
news-image

தெஹிவளையில் முதியவரைத் தாக்கி கொள்ளையிட்ட சந்தேகநபர்...

2026-04-20 09:52:43
news-image

03 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய...

2026-04-20 09:38:17
news-image

சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது!

2026-04-20 08:56:35
news-image

தேசிய அடையாள அட்டை விநியோக சேவைகள்...

2026-04-20 09:37:10
news-image

அநுராதபுரத்தில் பொல்லால் தாக்கி ஒருவர் கொலை:...

2026-04-20 09:46:40
news-image

தம்புள்ளையில் டயர் விற்பனை நிலையத்தில் தீவிபத்து!

2026-04-20 09:13:14
news-image

மேல் மாகாணத்தில் பாரிய போதைப்பொருள் வேட்டை:...

2026-04-20 08:44:54