திறந்த பாராளுமன்ற முன்னெடுப்பு தொடர்பான பாராளுமன்ற ஒன்றியத்தின் உறுப்பினர்களுக்கான இரண்டு நாள் செயலமர்வு நிறைவு 

10 Mar, 2026 | 04:12 PM
image

திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் உறுப்பினர்களுக்காக கடந்த 6 மற்றும் 7ஆம் திகதிகளில் களுத்துறையில் ஏற்பாடு செய்யப்பட்ட இரண்டு நாள் வதிவிட செயலமர்வு நிறைவுபெற்றது.

ஜனநாயகத்திற்கான வெஸ்மினிஸ்டர் மன்றம் (Westminster Foundation for Democracy – WFD) மற்றும் அனைத்து சமூகங்களையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான கூட்டணி (Coalition for Inclusive Impact – CII) ஆகியவற்றின் அனுசரணையுடன் இந்தச் செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் இணைத் தலைவர்களான விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் கிரிசாந்த அபேசேன மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் உள்ளிட்ட ஒன்றியத்தின் உறுப்பினர்கள், பாராளுமன்றத்தின் அதிகாரிகளும் இதில் கலந்துகொண்டனர். 

இச்செயலமர்வில் ஒன்றியத்தின் உறுப்பினர்கள் மற்றும் துறைசார் நிபுணர்களின் கருத்துக்களைப் பெற்று திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்படவிருக்கும் எதிர்காலத் திட்டங்களும் வகுக்கப்பட்டன.

இதற்கமைய திறந்த அரசாங்கம் மற்றும் திறந்த பாராளுமன்றம் போன்ற கொள்கைகள் என்பன விரிவாக இங்கு ஆராயப்பட்டன. 

திறந்த பாராளுமன்ற முன்னெடுப்பின் ஊடாக வெளிப்படைத்தன்மை (Transparency), பொறுப்புக்கூறல் (Accountability), பங்கெடுப்பு (Participation) மற்றும் சகலருக்கும் வாய்ப்பளித்தல் (Inclusivity) போன்ற பிரதான கொள்கைகளின் மூலம் பாராளுமன்றத்தை மக்களுக்கு நெருக்கமான நிறுவனமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் குறித்து ‘திறந்த பாராளுமன்ற செயற்பாட்டுக்கான தேசிய ஆலோசகர் அஞ்சலீனா ஹேர்மன் இங்கு கருத்துக்களை முன்வைத்தார். 

அத்துடன், திறந்த பாராளுமன்றக் கொள்கை நடைமுறைப்படுத்தப்படும் ஏனைய உலக நாடுகள் மற்றும் அவை பின்பற்றும் நடைமுறைகள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

2015ஆம் ஆண்டு இந்த ஒன்றியம் முதல் தடவையாக உருவாக்கப்பட்ட பின்னர் இலங்கை பாராளுமன்றத்தை மக்களுக்கு நெருக்கமான நிறுவனமாக மாற்றுவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பாராளுமன்றத்தின் உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன  விளக்கமளித்தார். 

மேலும், உள்ளூராட்சி மன்றங்களில் குழு முறைமைகள் மற்றும் அவற்றில் பொதுமக்களின் பங்களிப்பை அதிகரிப்பது தொடர்பில் பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் பிரதான சட்ட அதிகாரி கயனி பிரேமதிலக விளக்கமளித்தார்.

இங்கு வளவாளர்கள் மற்றும் ஒன்றியத்தின் உறுப்பினர்களுக்கு இடையில் கருத்துப்பரிமாற்றங்கள் இடம்பெற்றதுடன், இவற்றின் ஊடாக ஒன்றியத்தின் எதிர்கால செயற்றிட்டம் மற்றும் மூலோபாயத் திட்டங்களைத் தயாரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

இங்கு கருத்துத் தெரிவித்த ஒன்றியத்தின் இணைத் தலைவர்களான விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சர் (பேராசிரியர்) கிரிசாந்த அபேசேன மற்றும்  பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ஆகியோர் பாராளுமன்றத்தை மக்களுக்கு நெருக்கமான நிறுவனமாக மாற்றுவதற்குத் தேவையான தலையீட்டை திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்களுக்கான பாராளுமன்ற ஒன்றியம் முன்னெடுக்கும் என வலியுறுத்தினர்.

இச்செயலமர்வில் ஜனநாயகத்திற்கான வெஸ்மினிஸ்டர் மன்றத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் சஞ்ஜய் விக்னராஜா மற்றும் அனைத்து சமூகங்களையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான கூட்டணியைப் பிரதிநிதித்துவப்படுத்தி மூலோபாயம் மற்றும் ஆளுமை குறித்த நிபுணர் டிலாஷினி அங்குனவெல ஆகியோரும் பங்கேற்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்தாலும்...

2026-04-16 15:49:12
news-image

புத்தாண்டு காலப்பகுதியில் மாத்திரம் 42 விபத்துகளில்...

2026-04-16 22:09:21
news-image

இந்த ஆண்டுக்குள் மாகாணசபைத் தேர்தல் ?...

2026-04-16 15:42:25
news-image

நவீன கால விகடகவி சஜித்தை வைத்து...

2026-04-16 15:29:04
news-image

அதிகளவு கரும்புகையை வெளியேற்றும் வாகனங்கள் தொடர்பில்...

2026-04-16 18:42:17
news-image

மத்திய கிழக்கு போர்ச்சூழலில் நாளை நாட்டுக்கு...

2026-04-16 17:46:54
news-image

வாவியில் நீராடிய இருவர் நீரில் மூழ்கி...

2026-04-16 17:43:42
news-image

பெருமளவான போதைப்பொருளுடன் தெற்கு கடலில் மீன்பிடிப்...

2026-04-16 17:21:19
news-image

வாகன இலக்கத் தகடு விதிமுறை மீறல்...

2026-04-16 17:01:38
news-image

வெடுக்குநாறி மலை தமிழர்களின் பூர்வீக நிலம்...

2026-04-16 16:50:37
news-image

ஆட்பதிவுத் திணைக்கள சேவைகள் நாளை இடைநிறுத்தம்!

2026-04-16 16:36:45
news-image

நாடு பாரிய வீழ்ச்சியை நோக்கிச் செல்கிறது...

2026-04-16 16:08:09