(நெவில் அன்தனி)
இலங்கை பாடசாலைகள் றக்பி கால்பந்தாட்ட சங்கத்தினால் நடத்தப்படும் பாடசாலைகள் றக்பி லீக், நொக் அவுட் போட்டி ஆகியவற்றுக்கு இலங்கையின் முன்னணி இணைப்பு வழங்குநர் டயலொக் ஆசிஆட்டா நிறுவனம் 6ஆவது தொடர்ச்சியான வருடமாக அனுசரணை வழங்குகிறது.
எதிர்கால தேசிய மற்றும் சர்வதேச வீரர்களை உருவாக்கும் நோக்கத்துடனும் ஒழுக்க சீலர்கள், நற்பிரஜைகள் ஆகியோரை உருவாக்கும் நோக்கத்துடனும் இலங்கை பாடசாலைகள் றக்பி கால்பந்தாட்ட சங்கத்துடன் டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி குழுமம் மீண்டும் இணைந்துள்ளது.

டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி குழுமத்தின் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி லசன்த தேவரப்பெரும, டயலொக் பாடசாலைகள் றக்பி போட்டிகளுக்கான அனுசரணைக்குரிய மாதிரி காசோலையை இலங்கை பாடசாலைகள் றக்பிகால்பந்தாட்ட சங்கத் தலைவர் புத்திக்க அத்தநாயக்கவிடம் கையளித்தபோது எடுக்கப்பட்ட படம். படத்தில் டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி குழுமத்தின் உப தலைவர் ஹர்ஷ சமரநாயக்க, கல்வி அமைச்சின் பிரதி பணிப்பாளர் தில்ருக் ஜயவர்தன ஆகியோரும் காணப்படுகின்றனர்.
கடந்த வருடத்தைப் போன்று இந்த வருடமும் விறுவிறுப்பான போட்டிகளை பாடசாலை வீரர்கள் தருவார்கள் என அனுசரணையாளர்களும் போட்டி ஏற்பாட்டாளர்களும் எதிர்பார்க்கின்றனர்.
இந்தப் போட்டிகள் தொடர்பாக தெளிவுபடுத்தும் ஊடகவியாலாளர் சந்திப்பு, டயலொக் கிண்ண அறிமுகம், அனுசரணை வழங்கும் வைபவம் என்பன பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தின் செஃபயர் கேட்போர்கூடத்தில் நேற்று நடைபெற்றது.
இந்த வருட பாடசாலைகள் றக்பி பருவகாலம் ஜனாதிபதி கிண்ணத்துக்கான நொக் அவுட் போட்டியுடன் நாளை புதன்கிழமை (11) ஆரம்பமாகவுள்ளது.
இதனைத் தொடர்ந்து முதலாம், இரண்டாம், மூன்றாம் பிரிவுகளில் 90 பாடசாலைகளைச் செர்ந்த 2500க்கும் மேற்பட்ட றக்பி வீரர்கள் பங்குபற்றும் 'டயலொக் பாடசாலைகள் றக்பி லீக் 2026' ஆரம்பமாகும்.
ஜனாதிபதி கிண்ண நொக் அவுட் றக்பி போட்டிகளில் நடப்பு சம்பியன் இஸிபத்தன, முன்னாள் சம்பியன் புனித பேதுருவானவர் ஆகியன உட்பட அதிசிறந்த 16 பாடசாலை அணிகள் பங்குபற்றுகின்றன.
றோயல் விளையாட்டுத் தொகுதி மைதானத்தில் நாளைபுதன்கிழமை (11) பிற்பகல் 4.15 மணிக்கு ஆரம்பமாகவுள்ள முதலாவது முன்னோடி கால் இறுதிப் போட்டியில் புனித பேதுருவானர் அணியும் ஆனந்த அணியும் மோதவுள்ளன.
சீ.ஆர். மைதானத்தில் நடைபெறவுள்ள இரண்டாவது முன்னோடி கால் இறுதிப் போட்டியில் திரித்துவ அணியும் தேர்ஸ்டன் அணியும் விளையாடவுள்ளன.
ஏனைய போட்டிகள்
மார்ச் 13: வெஸ்லி எதிர் மஹாநம (றோயல் விளையாட்டுத் தொகுதி மைதானம்)
மார்ச் 14: இஸிபத்தன எதிர் சயன்ஸ் (றோயல் மைதானம்), புனித சூசையப்பர் எதிர் கிங்ஸ்வூட் (ஹெவ்லொக் மைதானம்), டி.எஸ். சேனாநாயக்க எதிர் ஸாஹிரா (சீ.ஆர். மைதானம் இரவு 7.15 மணி)
மார்ச் 15: றோயல் எதிர் புனித அந்தோனியார் (சீ.ஆர். மைதானம் இரவு 7.15 மணி), பரி. தோமையார் எதிர் ஸ்ரீ சுமங்கல (ஹெவ்லொக் மைதானம்)
சீ.ஆர். மைதானத்தில் நடைபெறும் இரண்டு போட்டிகளைத் தவிர மற்றைய போட்டிகள் பிற்பகல் 4.15 மணிக்கு ஆரம்பமாகும்.
கால் இறுதிப் போட்டிகள் மார்ச் 21, 22ஆம் திகதிகளிலும் அரை இறுதிப் போட்டிகள் மார்ச் 28, 29ஆம் திகதிகளிலும் இறுதிப் போட்டி ஏப்ரல் 4ஆம் திகதியும் நடைபெறும். இப் போட்டிகள் சுகததாச விளையாட்டடரங்கில் அல்லது றோயல் விளையாட்டுத் தொகுதி மைதனாத்தில் நடைபெறும்.
போட்டிகள் யாவும் தபப்பரே ரிவி (அலைவரசை 62, 63), தபப்பரே ரிவி எச்டி (அலைவரிசை 125, 127) ஆகியவற்றில் டயலொக் டெலிவிஷன் வாயிலாக நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.
தேசிய மட்டத்தில் கிரிக்கெட், கரப்பந்தாட்டம், வலைபந்தாட்டம், ஈஸ்போர்ட்ஸ், ஸ்ரீலங்கா பகிரங்க கோல்வ், ஆகியவற்றுக்கு பெருமை மிகு அனுசரணையாளராக டயலொக் திகழ்கிறது.
இதனைவிட பராலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள், தேசிய பரா விளையாட்டுப் போட்டிகள், உலக பரா விளையாட்டுப் போட்டிகள் ஆகியவற்றுக்கு இரண்டு தசாப்தங்களுக்கு மேல் டயலொக் அனுசரணை வழங்கிவருகிறது.


















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM