ஒரு திரைப்படத்தின் வெற்றியை உறுதிப்படுத்துவதில் பின்னணி இசைக்கு பாரிய பங்களிப்பு உண்டு. இயக்குநர் சொல்ல விரும்பிய விடயங்களை காட்சி மொழியாக திரையில் ஒளிர விட்டாலும் அதனை பார்வையாளர்களின் மனதிற்கு அழகாகவும் இதமாகவும் கடத்துவது பின்னணி இசை தான்.
இந்த பின்னணி இசை நுட்பங்கள் திறமை மிக்க இசை கலைஞர்களுக்கும்.. இசையமைப்பாளர்களுக்கு எளிதாக கைவரப்பெறுவதில்லை. இதனால் தற்போது பிரம்மாண்டமான பட்ஜட்டில் உருவாகும் மாஸான எக்சன் படங்களுக்கும்.. பின்னணி இசையை மட்டுமே நம்பி உருவாகும் ஹாரர் படங்களுக்கும் பின்னணி இசை அமைப்பாளர்களை படைப்பாளிகள் கவனத்துடன் தெரிவு செய்கிறார்கள்.
அந்த வகையில் அறிமுக இயக்குநர் எம். எஸ். மூர்த்தி இயக்கத்தில் சின்னத்திரை சுப்பர் ஸ்டார் ரட்சிதா மகாலட்சுமி நடிப்பில் வெளியான '99 /66' ஹாரர் திரைப்படத்திற்கு பின்னணி இசை அமைத்து அனைவரது கவனத்தையும் கவர்ந்திருக்கிறார் அறிமுக இசை அமைப்பாளர் அமர் கீத்.
இன்றைக்கும் மெலோடியான பாடல்களுக்கு புகழ்பெற்ற இசையமைப்பாளர் சௌந்தர்யனின் வாரிசான அமர் கீத்தை அவருடைய இசைக்கூடத்தில் சந்தித்து ஹாரர் படங்களுக்கு பின்னணி இசையமைத்த அனுபவத்தை பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டோம்.
''99 /66 படத்திற்கு பின்னணி இசை அமைக்க வேண்டும் என படக் குழு எம்மை தொடர்பு கொண்டனர். ஹாரர் படங்களுக்கு பின்னணி இசை தான் முதுகெலும்பு என விவரித்த இயக்குநர் சிறப்பாக உருவாக்குங்கள் என சுதந்திரம் கொடுத்தார். படத்தை முழுமையாக பார்த்த பிறகு இதுபோன்ற ஹாரர் படங்களுக்கு இசை அமைப்பது சவாலானது என்பதால்.. என்னுடைய இசை குழுவில் உள்ள நண்பர்களையும் இணைத்து விவாதித்து பின்னணி இசை அமைக்கும் பணியை தொடங்கினோம்.
ஹாரர் படங்களுக்கு சில தருணங்களில் சில காட்சிகளில் இசை அமைக்காமல் இருப்பதும்... சில காட்சிகளில் அதிரடியான இசையை ஒலிக்க விடுவதும் இயல்பு. இதனை மீறி புதிய ஒலிகளை திரையில் ஒலிக்கச் செய்து பார்வையாளர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை வழங்க வேண்டும் என தீர்மானித்தோம். இதற்கான தேடலில் ஈடுபட்டு பிறகு பின்னணி இசையை உருவாக்கினோம்.
அது இந்த அளவிற்கு ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் பாராட்டை பெறும் என எதிர்பார்க்கவில்லை. இது எங்கள் குழுவின் தொடக்க நிலை தான். தொடர்ந்து பின்னணி இசை மட்டுமல்லாமல் பாடல்களிலும் இனிமையான விடயங்களை உருவாக்கி ரசிகர்களுக்கு சிறந்த இசை அனுபவத்தை வழங்க காத்திருக்கிறோம்.
இந்தப் படத்தில் சவாலான தருணங்கள் என்றால்... புத்த மதம் தொடர்பான காட்சிகளுக்கு பின்னணி இசை அமைப்பது... உச்சகட்ட காட்சியில் பழிக்கு பழி வாங்கும் தருணத்தில் பின்னணி இசையமைத்ததும் சவாலானதாக இருந்தது.
தற்போது எம்முடைய இசைக்குழு சார்பில் ஐந்து பாடல்கள் அடங்கிய சுயாதீன இசை அல்பத்தை உருவாக்கி வருகிறோம். அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு இருக்கிறோம்.
மேலும் தற்போது இரண்டு திரைப்படங்களுக்கு பாடல்கள் மற்றும் பின்னணி இசை அமைப்பது தொடர்பான ஒப்பந்தங்களில் கை சாத்திடுவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இன்றைய சூழலில் இசை என்பது ஒவ்வொரு இசைக் கலைஞரின் இசை ஆளுமை மற்றும் ஒலி ஆளுமையை பொறுத்து அமைகிறது என குறிப்பிடலாம்.
றாப் இசை பாடல்களுக்கு வரவேற்பு அதிகரித்து வருவது இன்றைய ஜென் ஸீ தலைமுறையினரின் ரசனை மாற்றம் என்றும் குறிப்பிடலாம். '' என்றார்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM