அனுமதிபத்திரமின்றி சட்டவிரோதமாக லொறி ஒன்றின் மூலம் மஹோகனி பலகைகளை கடத்திச் சென்ற இருவரை கடுகஸ்தொடை வாசனாகந்த பகுதியில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து குறித்த வீதியில் பயணித்த லொறியை வழிமறித்து பொலிஸார் சோதனை செய்த போதே குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து கடத்திச்செல்லப்பட்ட  75 மஹோகனி பலகைகளையும் கடத்தலுக்கு பயன்படுத்திய லொறியையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 34 மற்றும் 38 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஆரம்பகட்ட விசாரணையின் பின்னர் குறித்த சந்தேகநபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக கடுகஸ்தொடை பொலிஸார் தெரிவித்தனர்.