தலவாக்கலை பாரதி மகா வித்தியாலயத்திற்கு திறன் பலகை அன்பளிப்பு

Published By: Vishnu

10 Mar, 2026 | 04:54 AM
image

தலவாக்கலை பாரதி மகா வித்தியாலயத்திற்கு இன்று திறன் பலகை (Smart Board) ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது. மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை இலகுவாக முன்னெடுக்கும் வகையில் இந்த திறன் பலகை மனித நேய நம்பிக்கை நிதியம் அமைப்பினால் வழங்கப்பட்டது. பாடசாலையில் பிரதி அதிபர் பெரியநாயகம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் . பிரதம அதிதியாக மனிதநேய நம்பிக்கை நிதியமைப்பின் வளையகத்திற்கான இணைப்பாளர் ஐயா கருப்பன் கிருஷ்ணராஜா அவர்களும் விசேட அதிதியாக ஸ்ரீபாத கல்வியியற் கல்லூரியின் ஓய்வு பெற்ற உப பீடாதிபதி மேத்தியூ அவர்களும் கலந்து சிறப்பித்தனர். 

புதிய கல்வி சீரமைப்பின் பிரகாரம் நவீன தொழில்நுட்ப கருவிகள் மூலம் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளை எதிர்வரும் காலங்களில் முன்னெடுக்க வல்ல பாடசாலைகளில் இவ்வாறான திறன்  பலகைகள் இருப்பது அத்தியாவசியமானது. அந்த வகையில் பாரதி மகா வித்தியாலயத்திற்கு கிடைத்த இந்த திறன் பலகையை கொண்டு மாணவர்கள் முழுமையான பயன் பெறுவர். பாடசாலையில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப திறன் பாட ஆசிரியரும் Smart unit இன் பொறுப்பாசிரியருமான கமலேஸ்வரி பாலகிருஷ்ணன் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நுவரெலியா கல்வி வலய தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்திரன் பாட ஆசிரியர் ஆலோசகர் என்டன் இக்னேசியஸ் அவர்களும் கலந்து கொண்டார். 

இந்த நிகழ்வில் ஓய்வு பெற்ற ஸ்ரீ பாத கல்வியியற் கல்லூரியின் உப்பிடாதிபதி , மனிதநேய அமைப்பின் மலையக இணைப்பாளர் மற்றும் ஆசிரியர் ஆலோசகர் ஆகிய மூவரும் சேவை பாராட்டி பாடசாலை நிர்வாகத்தினர் கௌரவிக்கப்பட்டனர். இந்நிகழ்வானது இன்று பி.ப 2 மணிக்கு பாரதி மகா வித்தியாலய திறன் வகுப்பறையில் (Smart Unit) நடைபெற்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மட்டு. செட்டிப்பாளையம் மகா வித்தியாலயத்தில் 12...

2026-04-20 14:11:52
news-image

மட்டக்களப்பில் அன்னை பூபதி நினைவேந்தல் ஊர்திப்...

2026-04-18 18:05:00
news-image

திருக்கோணேஸ்வரப் பெருமானின் இரதோற்சவம்

2026-04-18 15:41:04
news-image

திருக்கோணேஸ்வரப் பெருமானின் தீர்த்தோற்சவம்..!

2026-04-18 15:14:54
news-image

தித்வா பேரழிவுக்குப் பின் மாவதுரவில் புத்தாண்டு...

2026-04-18 14:51:45
news-image

“ஈடுபாட்டுடன் பாடுபடுவோம்” தமிழ்மொழி விழா சிங்கப்பூரில்...

2026-04-16 15:24:21
news-image

யாழ்ப்பாண வரலாற்று ஆய்வில் மைல்கல்லாக பேராசிரியர்...

2026-04-15 17:57:27
news-image

Ramadan health Challenge போட்டிக்கான விருது...

2026-04-15 09:18:04
news-image

கொழும்பு டி லா சால் கல்லூரியில்...

2026-04-11 15:06:46
news-image

“ கலைச் செல்வம் " பட்டம்...

2026-04-11 11:23:12
news-image

உதயமாகிறது “நல உதயம்” சமூகக்குரல்

2026-04-10 18:16:56
news-image

மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய...

2026-04-09 18:13:13