லிந்துல மொராய நகர வர்த்தக நிலையங்களில் 4 இலட்சம் ரூபாய் பணத்தை திருடிய குற்றத்தின் பேரில் 12 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவனையும் அவனது தாயாரையும் லிந்துலை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சிறுவனிடமும் தாயிடமும் ஆரம்ப கட்ட விசாரணைகளை நடாத்திய பொலிஸார் குறித்த 12 வயது சிறுவன் தான் வேலை செய்யும் வர்த்தக நிலையத்தில் பணம் திருடியமை உண்மை என நிரூபணமாகியுள்ளதாகவும் திருடிய பணத்தை சிறுவன் தன் தாயிடம் கொடுத்துள்ளான் எனவும் தாய் குறித்த பணத்தொகையில் ஒரு பகுதியை வங்கியில் வைப்பு செய்துள்ளதாகவும் எஞ்சிய பணத்தொகையை தம்மிடம் வைத்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட தாயையும் மகனையும் விளக்கமறியலில் வைத்துள்ள பொலிஸார் 14 வயதுக்கு குறைந்த சிறுவனை வேலைக்கு அமர்த்திய குற்றத்தின் பேரில் வர்த்தக நிலைய உரிமையாளருக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தனர்.