வரவேற்பை பெற்று வரும் கென் கருணாஸின் 'யூத்' பட முன்னோட்டம்

09 Mar, 2026 | 04:09 PM
image

நட்சத்திர வாரிசும், இசைக் கலைஞருமான கென் கருணாஸ் கதையின் நாயகனாக அறிமுகமாகும் 'யூத் 'திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சிலம்பரசன்TR அவருடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

அறிமுக இயக்குநர் கென் கருணாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'யூத் ' திரைப்படத்தில் கென் கருணாஸ், சுராஜ் வெஞ்சாரமூடு ,தேவதர்ஷினி , அனிஷ்மா அனில் குமார், மீனாட்சி தினேஷ், பிரியன்யான்ஷி யாதவ் , நளினி, சின்னத் தமிழா, தாஜ்மோலா , 'கெட்டவன்' மணிகண்டன், சுரேன் வின்சென்ட் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

விக்கி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். தனியார் பாடசாலையில் பயிலும் மாணவ மாணவியர்களின் வளரிளம் பருவத்தின் வாழ்வியலை பொழுதுபோக்கு அம்சத்துடன் விவரிக்கும் இந்த திரைப்படத்தை பார்வதா என்டர்டெய்ன்மெண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் கருப்பையா சி. ராம் - சுலோச்சனா குமார் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகும் இப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.  இதில் இடம் பிடித்திருக்கும் காட்சிகள் ..எதிர் பாலின ஈர்ப்பு தொடர்பான உளவியலின் ஆக்கிரமிப்பிற்கு ஆட்பட்டிருக்கும் மாணவ பருவத்து நிகழ்வுகளை இன்றைய இளம் தலைமுறை ரசிகர்களும் ரசிக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருப்பதால் பெரும் ஆதரவு கிடைத்து வருகிறது. இதன் காரணமாக இந்த படத்தின் முன்னோட்டம் வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் ஏழு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருவதுடன்.. படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பையும் எகிற செய்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்