பெண்மணிகளின் வலிமையையும் , பொறுமையையும் உரக்கப் பேசும் 'மயிலா' படத்தின் டீசர் வெளியீடு

09 Mar, 2026 | 03:42 PM
image

மண் மணம் சார்ந்த படைப்புகளில் தோன்றி திறமையான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் நடிகை செம்மலர் அன்னம் கதையை வழிநடத்திச் செல்லும் மைய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ' மயிலா' திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் செம்மலர் அன்னம் இயக்கத்தில் உருவாகி உள்ள 'மயிலா' திரைப்படத்தில் குடும்பங்களையும் , சமூகங்களையும் அமைதியாக வடிவமைக்கும் அழுத்தமான பெண்மணி கதாபாத்திரத்தில் இயக்குநர் செம்மலர் அன்னம் நடித்திருக்கிறார்.

இதனை நியூட்டன் சினிமா நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆண்டோ தயாரித்திருக்கிறார். இத்திரைப்படத்தை இயக்குநர் பா. ரஞ்சித் வழங்குகிறார்.

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் இடம் பிடித்திருக்கும் காட்சிகள் யதார்த்த வாழ்வியலில் பெண்களின் பங்களிப்பு குறித்து பேசுவதால் பார்வையாளர்களின் கவனத்தை கவர்ந்திருக்கிறது.

அத்துடன் இத்திரைப்படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டுகளை பெற்றிருப்பதால் தமிழ் ரசிகர்களிடமும் வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்