நடிகர் 'உறியடி' விஜயகுமார் நடிக்கும் 'அறிவு' படத்தின் தொடக்க விழா

09 Mar, 2026 | 03:35 PM
image

நடிகர் 'உறியடி' விஜயகுமார் முதன்மையான கதாபாத்திரத்தில் தோன்றும் புதிய திரைப்படத்திற்கு , 'அறிவு 'என பெயரிடப்பட்டு, அதன் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. 

இயக்குநர் சத்ய சிவா இயக்கத்தில் உருவாகும் 'அறிவு' திரைப்படத்தில் 'உறியடி' விஜயகுமார், 'கயல்'ஆனந்தி, ஐ. எம். விஜயன், சிங்கம் புலி, தீபா சங்கர் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். தில் ராஜு ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு டி இமான் இசைமமைக்கிறார்.

சமூகத்திற்கு தேவையான விடயத்தை அழுத்தமாக பதிவு செய்யும் இந்த திரைப்படத்தை மூவி ட்ரான் புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் சாய் வினோத் ஜெயக்குமார் தயாரிக்கிறார்.

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு விரைவில் நடைபெறுகிறது என தெரிவித்துள்ள படக் குழு இப்படத்தின் முதல் தோற்றப் பார்வையையும் வெளியிட்டிருக்கிறது. இதனை தமிழ் திரையுலகின் நட்சத்திர தம்பதிகளான சூர்யா- திருமதி ஜோதிகா சூர்யா ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ளனர்.‌

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்