பொலிவுட் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான ரன்வீர் சிங் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி வசூல் ரீதியாக பாரிய வெற்றியைப் பெற்ற துரந்தர் படத்தின் இரண்டாம் பாகத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.
உலகம் முழுவதும் எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் பட மாளிகையில் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் இந்தி ஆகிய இந்திய மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் 'துரந்தர் 2 ' திரைப்படத்தில் ரன்வீர் சிங், ஆர். மாதவன், சஞ்சய் தத், அர்ஜுன் ராம்பால், சாரா அர்ஜுன், ராகேஷ் பெடி, மானவ் கோஹில், யாமி கௌதம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
விகாஸ் நௌலேகா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஷெஸ்வத் சச்தேவ் இசையமைத்திருக்கிறார். இயக்குநர் ஆதித்யா தர் இயக்கத்தில் அந்நிய தேசத்து மண்ணில் இந்தியாவின் உளவுத்துறை அதிகாரியாக பணியாற்றும் ஒருவரின் தொழில் சார்ந்த வாழ்வியல் பின்னணியில் அதிரடி எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை பி 62 ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் லோகேஷ் தர் தயாரித்திருக்கிறார் . இதனை ஜியோ ஸ்டுடியோஸ் வழங்குகிறது.
இப்படத்தின் முதல் பாகம் வெளியாகி, இந்திய மதிப்பில் 1300 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்ததால்... இதன் இரண்டாம் பாகத்திற்கு வணிக ரீதியான எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது.
இந்நிலையில் இப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி, குறுகிய கால அவகாசத்திற்குள் நாற்பது மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM