சம்பியன் ஆவதற்கான ஜாவா லேன், செரெண்டிப் கழகங்களின் வாய்ப்பு சற்று அதிகரிப்பு; சென். மேரிஸ். சொலிட் கழகங்களின் வாய்ப்பு நழுவியது

Published By: Vishnu

08 Mar, 2026 | 09:38 PM
image

(நெவில் அன்தனி)

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் நடத்தப்பட்டுவரும் சம்பியன்ஸ் லீக் காலப்பந்தாட்டத்தில்  சாம்பியன் ஆவதற்கான   கொம்பனித் தெரு ஜாவா லேன், மாவனெல்லை செரெண்டிப் ஆகிய கழகங்களின் வாய்ப்பு சற்று அதிகரித்துள்ளதுடன் யாழ். நாவாந்துறை சென். மேரிஸ் கழகம், அநுராதபுரம் சொலிட் கழகம் ஆகியவற்றின் வாய்ப்புகள் பறிபோயின.

இன்று இரவு நடைபெறவுள்ள பெலிக்கன்ஸ் கழகத்துக்கும் சோண்டர்ஸ் கழகத்துக்கும் இடையிலான போட்டியில் பெலிக்கன்ஸ் கழகம் வெற்றிபெற்றால் மாவனெல்லை செரெண்டிப் கழகமும் சம்பியன் போட்டியிலிருந்து வெளியேறுவதுடன் பெலிக்கன்ஸ், ஜாவா லேன் ஆகிய கழகங்களில் ஒன்றே சம்பியனாகும்.

சோண்டர்ஸ் கழகம் மிகப் பெரிய கோல்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றால் சம்பியன் பட்டத்திற்கு நான்கு முனை போட்டி நிலவும்.

கொழும்பு குதிரைப் பந்தயத் திடலில் நேற்று நடைபெற்ற தீர்மானம் மிக்க சம்பியன்ஸ் லீக் சுப்பர் 8 போட்டிகளில் செரெண்டிப் கழகமும் ஜாவா லேன் கழகமும் தலா 4 - 0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றியீட்டி சம்பியன் ஆவதற்கான தங்களது வாய்ப்பை சற்று அதிகரித்துக்கொண்டன.

செரெண்டிப் கழகத்துக்கும் நியூ ஸ்டார் கழகத்துக்கும் இடையில் நடைபெற்ற முதலாவது போட்டியில் நியூ ஸ்டார் கழகம் ஏனோதானோ என விளையாடி தொல்வியைத் தழவியது. அப் போட்டியில் ஒரு பெனல்டியை தாரைவார்த்ததுடன் அதன் இரண்டு வீரர்கள் அநாவசியமாக மத்தியஸ்தரின் சிவப்பு அட்டைக்கு இலக்காகினர்.

போட்டியின் 19ஆவது நிமிடத்தில் செரெண்டிப் கழகத்தின் முன்கள வீரர் ஒடூக் இனோக் தனது எல்லையிலிருந்து உயர்வாக உதைத்த பந்தை நியூ ஸ்டார் கோல்காப்பாளர் நவீஸ் மொஹமத் முறையாக   தடுக்காததால் முதலாவது கோல் போடப்பட்டது.

35ஆவது நிமிடத்தில் செரெண்டிப் கழக வீரர் டாக்கோ ஜோர்ஜை தனது பெனல்டி எல்லையில் வைத்து முரணான வகையில் வீழ்த்திய மொஹமத் அத்தீபுக்கு இரண்டாவது மஞ்சள் அட்டையுடன் சிவப்பு அட்டை காட்டப்பட்டது.

இதனை அடுத்து பெனல்டியை ஒடூக் இனோக் புகுத்தி செரெண்டிப் கழகத்தை 2 - 0 என முன்னிலையில் இட்டார்.

அதன் பின்னர் போட்டியில் சுவாரஸ்யம் சற்று குன்றி காணப்பட்டது.

இடைவேவளையின் பின்னர் 73ஆவது நிமிடத்தில் ஒடூக் இனோக் தனது 3ஆவது கோலைப் போட்டார்.

போட்டி முடிவடைய சற்று நேரம் இருந்தபோது செரெண்டிப் வீரர் ஒருவரை தாக்கிய குற்றத்திற்காக மாற்றுவீரர் மொஹமத் ஷக்கிருக்கு சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார்

அடுத்த நிமிடத்தில் செரெண்டிப் கழக மாற்று விரர் மொஹமத் ஆஷிர் கொல் நிலையை 4ஆக உயர்த்தினார். அத்தடன் போட்டியும் நிறைவுக்கு வந்தது.

வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற மற்றொரு சுப்பர் 8 போட்டியில் பொலிஸ் கழகத்தை 4 - 0 என ஜாவா லேன் துவம்சம் செய்தது.

இந்தப் போட்டியில் மொஹமத் ரிஸ்கான் 29ஆவது நிமிடத்தில் அசத்தலான கோல் ஒன்றைப் போட்டு ஜாவா லேன் கழகத்தை 1 - 0 என முன்னிலையில் இட்டார்.

ஆனால், அதன் பின்னர் இரண்டு அணிகளுக்கும் இடையில் கடைசிவரை கடும் போட்டி நிலவியது. இரண்டு அணிகளும் கோல் போட எடுத்த முயற்சிகள் கைகூடவில்லை.

எனினும்  என்வாபிசி பேர்னார்ட் உபாதையீடு நேரத்தில் 2 கோல்கள் உட்பட 6 நிமிட இடைவெளியில் 3 கோல்களைப் போட்டு ஜாவா லேன் கழகத்துக்கு இலகுவான வெற்றியை ஈட்டிக்கொடுத்தார்.

சென் மேரிஸ் - சொலிட் வெற்றிதோல்வி இல்லை

யாழ்ப்பாணம் நாவாந்துறை சென். மேரிஸ் கழகத்துக்கும் அநுராதபுரம் சொலிட் கழகத்துக்கும் இடையிலான சுப்பர் 8 போட்டி 2 - 2 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தது.

இந்தப் போட்டியில் சொலிட் கழகத்தில் வட பகுதி வீரர்கள் பெருமளவில் விளையாடிமை விசேட அம்சமாகும்.

போட்டியின் 6ஆவது நிமிடத்தில் சொலிட் அணித் தலைவர் எஸ். ஞானரூபான் கொல் போட்டு தனது அணியை 1 - 0 என முன்னிலையில் இட்டார்.

ஆனால், 16ஆவது நிமிடத்தில் சென். மேரிஸ் அணித் தலைவர் எம்.  நிதர்சன்  25 யார் தூரத்திலிருந்து ப்றீ கிக் மூலம் அருமையான கோல் ஒன்றைப் போட்டு கோல் நிலையை சமப்படுத்தினார்.

அதன் பின்னர் இரண்டு அணிகளும் வெற்றி கோலைப் போடுவதற்கு முயற்சித்தன.

போட்டியின் 56ஆவது நிமிடத்தில் எம். நிதர்சன் தலையால் முட்டி தனது இரண்டாவது கோலை போட்டு அணியை முன்னிலையில் இட்டார்.

ஆனால், போட்டி முடிவடைய 2 நிமிடங்கள் இருந்தபோது சொலிட் சார்பாக ஹென்றி சிபேஸ் கோல் நிலையை சமப்படுத்தினார்.

சற்று நேரத்தில் ஆட்டம் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தது.

இந்தப் போட்டி முடிவுகளுடன் ஜாவா லேன் கழகம் (12 புள்ளிகள்), பெலிக்கன்ஸ் (11), செரெண்டிப் (10) ஆகிய கழகங்கள் அணிகள் நிலையில் முதல் மூன்று இடங்களில் இருக்கின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஐசிசி அங்குரார்ப்பண மகளிர் சவால் கிண்ண...

2026-04-17 18:02:57
news-image

19 வயதுக்குட்பட்ட பெண்கள் மும்முனை ரி20...

2026-04-17 16:33:18
news-image

குவின்டன்  டி கொக் குவித்த அபார...

2026-04-17 05:47:10
news-image

பங்களாதேஷ் செல்லவுள்ள இலங்கை மகளிர் குழாம்...

2026-04-16 19:06:39
news-image

நியூஸிலாந்து ஏ அணியுடனான உத்தியோகப்பற்றற்ற டெஸ்டில்...

2026-04-16 18:55:58
news-image

இலங்கை விளையாட்டுத்துறையில் பெண்களுக்கு தேசிய ஒலிம்பிக்...

2026-04-16 16:27:53
news-image

பெங்களூருவின் பந்துவீச்சில் சரிந்தது லக்னோவ்; அணிகள்...

2026-04-15 23:47:23
news-image

108ஆவது அகில இங்கிலாந்து சிரேஷ்ட (மாஸ்டர்ஸ்)...

2026-04-15 17:22:54
news-image

ஒன்பது விஸ்டன் விருதுகளில் ஏழு விருதுகளை...

2026-04-15 16:39:56
news-image

உலக கிரிக்கெட் வீரர்கள் சங்கத்தின் வீரர்கள்...

2026-04-15 14:40:20
news-image

நூர் அஹ்மதின் துல்லிய பந்துவீச்சின் உதவியுடன்...

2026-04-15 00:09:03
news-image

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் தடுமாறிய ராஜஸ்தான் றோயல்ஸ்...

2026-04-14 03:51:27