(நெவில் அன்தனி)
அஹமதாபாத் நரேந்த்ரமோடி விளையாட்டரங்கில் தற்போது நடைபெற்றுவரும் இந்தியாவுக்கும் நியூஸிலாந்துக்கும் இடையிலான ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இந்தியா 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 255 ஓட்டங்களைக் குவித்தது.

சஞ்சு செம்சன், அபிஷேக் ஷர்மா ஆகிய இருவரும் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 43 பந்துகளில் 98 ஓட்டங்களைக் குவித்து பலமான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.
அவர்கள் இருவரும் பவர்ப்ளேயில் பகிர்ந்த 93 ஓட்டங்கள் இந்த வருட ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் பவர்ப்ளேயில் பெறப்பட்ட அதிகூடிய எண்ணிக்கையாகும்.

இதேவேளை, அபிஷேக் ஷர்மா 18 பந்துகளில் 50 ஓட்டங்களைப் பூர்த்தி செய்து இந்த வருட உலகக் கிண்ணத்தில் அதிவேக அரைச் சதத்தைப் பதிவுசெய்தார்.
21 பந்துகளை எதிர்கொண்ட அபிஷேக் ஷர்மா 6 பவுண்டறிகள். 3 சிக்ஸ்களுடன் 52 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார்.
அதனைத் தொடர்ந்து சஞ்சு செம்சன், இஷான் கிஷான் ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 48 பந்துகளில் 105 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது சஞ்சு செம்சன் ஆட்டம் இழந்தார்.
இந்த உலகக் கிண்ணத்தில் தனது 3ஆவது தொடர்ச்சியான அரைச் சதத்தைப் பெற்ற சஞ்சு செம்சன் 46 பந்துகளில் 5 பவுண்டறிகள், 8 சிக்ஸ்களுடன் 89 ஓட்டங்களைக் குவித்து ஆட்டம் இழந்தார்.
அதன் பின்னர் விக்கெட்கள் அடுத்தடுத்து வீழ்ந்தன.
16ஆவது ஓவரில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 203 ஓட்டங்களைக் குவித்திருந்த இந்தியா அதன் பின்னர் 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் 4 விக்கெட்களை இழந்தது.
இஷான் கிஷான் 25 பந்துகளில் 4 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 54 ஓட்டங்களைக் குவித்தார்.
எனினும் ஷிவம் டுபே 8 பந்துகளில் ஆட்டம் இழக்காமல் 26 ஓட்டங்களைப் பெற்று மொத்த எண்ணிக்கையை 255 ஓட்டங்களாக உயர்த்தினார்.
பந்துவீச்சில் ஜேம்ஸ் நீஷாம் 46 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
256 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு நியூஸிலாந்து பதிலுக்கு துடுப்பெடுத்தாடுகிறது.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM