பெண்ணியம் என்பது பெண்களைத் தாழ்வுப்படுத்தும் சமூக, அரசியல், பொருளாதார நடைமுறைகள், கட்டமைப்புக்கள் மற்றும் சமத்துவமின்மையை எதிர்க்கும் இயக்கங்கள், செயற்பாடுகள், கோட்பாடுகளின் தொகுப்பு ஆகும். பெண்ணின் சமத்துவத்தை கவனம் செலுத்தும் கோட்பாடகவும் இது வரையறுக்கப்படுவதுண்டு.
அந்த வகையில் பரதநாட்டிய கலையில் பெண் முற்காலத்திலும் தற்காலத்திலும் பெறும் முக்கியத்துவத்தினை “தேவதாசி” முறை மூலம், ஒரு பெண் எவ்வாறு தேவதாசியாக உருவாக்கப்பட்டுள்ளால், எவ்வாறு போற்றப்படட்டுள்ளால், எவ்வாறு தூற்றப்பட்டுள்ளால், இப்பொழுது அவளுக்கான மரியாதை போன்றவற்றை இக்கட்டுரை மூலம் விபரித்துக் கூறலாம் என நினைக்கிறேன்.
பரதநாட்டியத்தில் பல விதமான சிறப்புக்கள் காணப்படுகின்றன. அந்தவகையில் தேவதாசி பற்றி குறிப்பிடும் போது, தேவதாசிகள் இறைவனுக்காகவும் இறை பணிகளுக்காகவும் தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்கள்.
அதனால் “தேவ + அடியார்கள்” தேவரடியார்கள் எனப்பட்டனர் இறைவனுக்கு அடிமையானவர்கள் என்றும், “தேவதாசிகள் (தாசி என்றால் அடிமையென்று பொருள்)” “தேவனின் (இறைவனின்) அடிமைகள்” என்னும் பொருள்படும்படி அவர்களது பெயர்; அமைந்துள்ளது. தென்னகத்தில் பல பகுதகளில் தேவதாசிகள் அந்தந்தப் பகுதிகளுக்குரிய பெயர்களில் அழைக்கப்பட்டிருந்தனர்.
ஆந்திராவில் ‘ஜோகினி மாத்தம்மா வெளுகு’ என்றும், கர்நாடகத்தில் ‘எல்லம்மா’ என்றும் தமிழகத்தில் ‘தேவரடியார்கள்’ என்றும் அவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். தமிழகத்தில் தேவரடியார்களுக்கு சிறப்பிடம் வழங்கப்பட்டு வந்துள்ளது. இவர்களை பற்றி கே.கே.பிள்ளை தமது நூலில் ‘இசையிலும் கூத்திலிலும் வல்லுனரான பெண்கள் பலர் கோயில் பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.
கல்வெட்டுக்களில் இவர்கள் தேவரடியார்கள் என்று அழைக்கப்பட்டுள்ளனர். தேவரடியார்களுக்குத் தலைக்Nகுhலிகள், தனிச்செரிப்பெண்டுகள் என்றும் பெயர்கள் வழங்கின எனக்கூறியுள்ளார்.
பழங்கால தமிழகத்தில் ஆண்களும், பெண்களும் கோயில்களில் இறைவனுக்குத் தங்களைத்தாங்களே அடிமைகளாக மனமுவந்து அர்ப்பணித்துக் கொண்டனர். இந்த அடிமைமுறை என்பது அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளிலிருந்தது போன்ற அடிமை முறை அல்ல.
மற்ற நாடுகளில் இருந்த அடிமைகளைப் போல கோயில்களுக்குத்தம்மை அடிமைகளாக்கிக் கொண்ட தமிழகத் தேவதாசிகள் இழிவுபடவில்லை, கொடுமைப்படுத்தப்படவில்லை மாறாக அவர்கள் சமூகத்தில் உயர்ந்த நிலையில் போற்றப்பட்டனர். இவ்வாறு கோயில்களில் இறைவனுக்கு அடிமையாகும் முறைக்கு பல சான்றுகள் இலக்கியத்தில் உள்ளன. சேக்கிழார் எழுதிய பெரிய புராணத்தில்
‘யானும் என்பால் வருமுறை மரபுளோரும் வழித்தொண்டு செய்தற்கு ஓலை இருமையால் எழுதி நேர்ந்தேன்’ -(பெரியபுராணம்) இதன் மூலம் சுந்தரரின் திருமணத்தில் அவரை இறைவன் தடுத்தாட் கொண்டது. அவருடைய பாட்டனார் எழுதிக்கொடுத்த ஆளோலை என்னும் அடிமையோலையில் தங்களது பரம்பரையே அடிமையாக எழுதிக்கொடுக்கும் வழக்கம் இருந்திருப்பது புலனாகிறது.
மேலும் தேவதாசிகளின் தோற்றத்தை நோக்கும் போது முன்பு நாராயணர்கள் பதரிகாசிரமத்தில் தவம் புரிந்து வந்தனர். அவர்களின் தவத்திற்கு இடையூறு விளைவிக்க முற்பட்டு இந்திரன் தன் அவையில் சிறந்தவளான அரம்பையை அனுப்பினார். அரம்பையும் தனது வாத்தியக்குழுவினருடன் அம்முனிவர்களின் ஆசிரமத்திற்கு சென்றடைந்தாள்.
அவளது கருத்தை அறிந்த நாராயணன் தனது தொடையைக்கீறியதும் அங்கிருந்து எழில் மிகுந்தவளும் ஆடல்,பாடல்களில் ஒப்பற்றவளும், அரம்பையை வெல்லும் திறமை கொண்டவளுமான மங்கை தோன்றினாள். ஊரு(தொடை) யிலிருந்து தோன்றியதால் அவளுக்க ஊர்வசி எனப்பெயராயிற்று.
அவளைக்கண்ணுற்றதும் அரம்பையும் அவளது இசைக்குழுவினரும் செயலற்றுத்தம்பித்து நின்றனர். அரம்பையின் திறமையை கண்டுகளிக்கலாம் என்ற ஆவலுடன் இந்திரனும் அங்கு வந்தான். நிலைமை அறிந்து வெட்கித் தலை குனிந்து நின்றான். நூராயணன் அவனுக்கு நல்லுரைகள் கூறி அவனுக்கு அர்ப்பணம் செய்தான்.
அந்த ஊர்வசியின் வழி தோன்றியவர்கள் தேவதாசிகள் என்றும்ஆடல் பாடல்களில் திறமை பெற்று நாராயணன் கோயில்களின் முன் ஆடுவது அவர்களது குலத்தொழில் என்றும் ஒரு கதை கூறப்படுகிறது. (பரதநாட்டிய சாஸ்திரம் (கலைமாமணி எஸ்.என்.ஸ்ரீராமதேசிகன்) கோயில்வழிபாட்டுக்களில் நாட்டியம்) இவ்விடயம் கூறப்பட்டுள்ளது.
மேலும் தேவதாசிகளின் சிறப்பம்சம் மூலமாக எம்.கே.சரோஜாவின் நாட்டியத்தைக் காண்பது பரவசமூட்டுவதாக கருதப்பட்டது. அவருடைய பாவனையும், உணர்வுவெளிப்பாடும், அங்க அசைவுகளும் சறிபவங்களை நினைவூட்டுவயவாகும். ஊணர்வுகளை வெளிப்படுத்துவதில் அவரது நடனம் தேவதாசி ஆட்டத்தை பெரிதும் ஒத்தாக காணப்பட்டது.
இது பற்றி (பரநாட்டியம் (நாட்டியகலைமணி செல்வி. நிலா இளங்கோவன்) நடனக்கலை என்ற தலைப்பில் 83ம் பக்கத்தில் கூறப்படுள்ளது. அத்தோடு ‘ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா’ என்றதொரு பழமொழி உண்டு. அது தேவதாசிகளின் மரபில் தோன்றியதாக இருக்கலாம்.
ஏனெனில் தேவதாசிகளின் மரபில் சிறுமிக்கு ஐந்தாண்டுகள் வயதாகும் போதே நடனபயிற்சி துவக்கப்படுகிறது. என்பதன் மூலம் தேவதாசிகளின் பெருமை குறிப்பிடப்பட்டுள்ளது. (பரதநாட்டிய சாஸ்திரம் (கலைமாமணி எஸ்.என்.ஸ்ரீராமதேசிகன்) வேநர்த்தகியின் பயிற்சியில்) இவ்விடயம் கூறப்பட்டுள்ளது.
இவ்வளவு சிறப்பு வாய்ந்த தேவதாசி முறை பின்னர் ஏன் அவமானச் சின்னமானது என்பதை தெளிவுபடுத்தும் போது, தேவதாசி பரம்பரையில் ஒழுக்கக்கேடு திடீரென வந்துவிடவில்லை. ஆதியில் மூத்த மகளை தேவதாசியாக நேர்ந்து விடும் பழக்கம் இருந்தது.
ஆனால் பிற்காலத்தில் சற்று வசதி வந்த பிற்பாடு மூத்த மகளை தேவதாசியாக்க விரும்பாத சிலர் வேறு ஒரு பெண்ணை விலைக்கு வாங்கி தேவதாசியாக விடும் பழக்கம் தொடங்கியது. இப்படிப்பட்ட குறுக்கு புத்திகளுக்கு வளைந்துகொடுக்கிற வகையில் அன்றைக்கு சட்டமும் சமூக வழக்கமும் மாறிப்போனது.
வசதியற்ற பெண்ணை விலைக்கு வாங்கலாம் என்ற நிலை உருவான பிறகு, இறைவன் முன் நடனமாட வேண்டிய தேவதாசி அரசன் முன்னும் நடனம் ஆடலாம் என்ற நிலையும் எளிதாக அறிமுகமாகிவிட்டது. ராஜாதிராஜ சோழன் காலத்தில் 1174ல் பணக்கார வணிகர் நான்கு ஏழைப்பெண்களை 700 தங்கக்காசுகளுக்கு வாங்கித் திருவாளங்காடு கோவிலுக்கு அர்ப்பணம் செய்ததாக கல்வெட்டு கூறுகிறது.
நாளடைவில் அரசர்களும் அவர்களுக்கு கிழான சிற்றரசர்களும், ஜமீன்தார்களும், பண்ணையாளர்களும் பல தேவதாசிகளை தங்களுடைய ஆசை நாயகியாக வைத்துக்கொண்டனர். அதுவே அவர்களுடைய பணச்செருக்கின் அடையாளமாக கருதப்படும் நிலையும் உருவானது. பக்தியையும், பரதத்தையும், இசையையும் வளர்த்த தேவதாசிகளை தஞ்சை போன்ற நிலஉடமையாளர் ஆதிக்கம் நிறைபகுதிகளில் பாலியல்த்தொழிலில் வலுக்கட்டயமாக ஈடுபடுத்தினர். அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் அவமானச்சின்னமாக கருதப்பட்டனர். என்பவற்றின் மூலம் இவர்கள் தூற்றப்பட்டனர்.
இப்படிப்பட்ட அவமானகரமான சூழலில் சிக்கிய பெண்களை மீட்கத்தான் மூவலூர் ராமமிர்தம் அம்மையாரும், டாக்டர்.முத்துலெட்சுமிரெட்டியும் சட்டபூர்வமாக முயற்சி செய்தனர். தேவதாசி முறையை பூண்டோடு ஒழித்துக்கட்ட சட்டமியற்ற வேண்டுமென்று அவர்கள் போராடினார்கள். அப்போது சட்டமன்றத்தில் உறுப்பினராக இருந்த சத்தியமூர்த்தி தேவதாசி முறையை ஒழித்தால் தெய்வக்குற்றமாகிவிடும் என்றார்.
அவர்கள் சொர்க்கத்திற்குச் செல்லும் பாக்கியத்தை இழந்து விடுவார்கள் என்றார். தெய்வப்பணியில் ஈடுபடுபவர்களே தேவதாசி என்றார். ஆனால் அவருக்கு பதில் கொடுத்த முத்துலெட்சுமிரெட்டி அவர்கள், இதுவரை ஒரு குலத்தைச் சேர்ந்தவர்கள் இறைப்பணியாற்றினார்கள். இனி உங்கள் குலத்தைச்சேர்ந்த பெண்கள் இறைப்பணியாற்ற தேவதாசிகள் ஆகலாமே என்று கேட்டார்.
இவ்வாறு தான் மனிதர்களின் காம இச்சையால் கொச்சைப்படுத்தப்பட்ட தேவதாசிகளின் எதிர்காலம் மரியாதைமிக்கதாக மாற்றப்பட்டது என்பது வரலாறு. இதன்மூலம் ‘முத்துலெட்சுமிரெட்டி’ தேவதாசி ஒழப்புச்சட்டத்தை நிறைவேற்றி அதற்காக பாடுபட்டு தேவதாசியின் மதிப்பை அனைவரும் போற்றும்படி உருவாக்கினார் என்று கூறப்பட்டுள்ளது.
தற்காலத்தில் தேவதாசிகளின் சிறப்புக்கள் பல புத்தகங்களிலும் கா.பொ.த உயர்தர வகுப்பில் பரதநாட்டிய பாடத்தில் தேவதாசி பற்றி கூறப்பட்டுள்ளது. அவ்வாறு சிறப்பிக்கப்படுவதன் மூலம் தேவதாசிகள் உயர்ந்த நிலையில் உள்ளார்கள் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு பரதநாட்டியத்தில் தேவதாசியாகிய பெண்ணை சிறப்பாக போற்றி அவரின் மதிப்பு எங்கும் போற்றப்பட்டுள்ளது. இதன்மூலம் பெண்ணியம் போற்றும் பரதக்கலை என்னும் கருத்து தெளிவாகிறது.
கயிலநாதன் ஷாலினி















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM