29ஆவது மகாவலி விளையாட்டு விழா எதிர்வரும் 9ஆம்,10 ஆம் திகதிகளில் பொலன்னறுவை தேசிய விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.
இலங்கையின் மிகவும் பழமையான விளையாட்டுப் போட்டிகளில் ஒன்று மகாவலி விளையாட்டு விழாவாகும்.
மாணவர்களின் விளையாட்டு ஆற்றலை வெளிப்படுத்தும் வகையில் வருடாந்தம் நடைபெற்றுவரும் மகாவலி விளையாட்டு விழாவானது எதிர்வரும் 9ஆம், 10ஆம் திகதிகளில் பொலன்னறுவை தேசிய விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.
நிறைவு விழாவில் பிரதம விருந்தினராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொள்ளவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இம்முறை நடைபெறவுள்ள 29 ஆவது மகாவலி விளையாட்டு விழாவில் 10 வலயங்களைச் சேர்ந்த 5000 விளையாட்டு வீர, வீராங்கனைகள் பங்குபற்றவுள்ளனர்.
நாட்டின் மிகப் பழமையானதாக கருதப்படும் மகாவலி விளையாட்டு விழாவின் மூலம் பல விளையாட்டு வீர, வீராங்கனைகள், பயிற்றுவிப்பாளர்கள், நடுவர்கள் உருவாக்கப்பட்டுள்ளனர்.
ஏழு மகாவலி வலயங்களின் விளையாட்டு வீர, வீராங்கனைகளின் ஆற்றல்களை தேசிய, சர்வதேச மட்டத்துக்கு கொண்டு செல்லும் நோக்குடன் 31 ஆண்டுகளுக்கு முன்னர் இவ் விளையாட்டு விழா ஆரம்பிக்கப்பட்டது. தற்போது அது பத்து வலயங்களாக விரிவடைந்துள்ளது.
நாட்டுக்கு புகழ் சேர்த்த பல வீர, வீராங்கனைகள் மகாவலி விளையாட்டு விழாவில் உருவாகியுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM