சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, புதிய அலை கலை வட்ட மகளிர் அணியினரால் ஏற்பாடு செய்யப்பட்ட 'வீரவனிதையர் விருது விழா' கடந்த சனிக்கிழமை (07) கொழும்பில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது.
ல்வேறு துறைகளில் சாதனை படைத்த 20 பெண்களுக்கு இதன்போது 'வீரவனிதையர் விருது' வழங்கி கௌரவிக்கப்பட்டது. பெண்களின் ஆளுமை மற்றும் சமூகப் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருது விழா அமைந்திருந்தது.
மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் கௌரவ திருமதி சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார். பிரபல தொழிலதிபர் பி.எஸ். செல்வரட்ணம் தலைமையில் நடைபெற்ற இந்நிழ்வில், தமிழகத்திலிருந்து வருகை தந்த பிரபல கவிஞர் தங்கம் மூர்த்தி சிறப்பு அதிதியாகப் பங்கேற்றார்.
மேலும், தினகரன் பத்திரிகையின் ஆசிரியர் செந்தில்வேலவர், காயத்ரி விக்கிரமசிங்க, எம். யோகராஜா மற்றும் ஆர். வைத்தியமாநிதி டாக்டர் கனகலட்சுமி ஆகியோரும் சிறப்பு அதிதிகளாகக் கலந்து சிறப்பித்தனர்.
விருது வழங்கலைத் தொடர்ந்து, இளங்கலைஞர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகளும் அரங்கேறின. இந்நிகழ்வில் பெருந்திரளானோர் கலந்துகொண்டதுடன், சர்வதேச மகளிர் தினத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் விழா அமைந்திருந்தது.






















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM