தமிழ்த் தேசியக் கட்சிகளிடையே ஏற்பட்டுள்ள இணக்கம் தொடரட்டும்

08 Mar, 2026 | 12:09 PM
image

இனப்­பி­ரச்­சி­னைக்­கான அர­சியல் தீர்வு தொடர்பில் கலந்­து­ரை­யாடி, பொது­வான திட்­ட­வ­ரை­வொன்றை தயா­ரிப்­ப­தற்கு தமிழ் தேசியக் கட்­சி­களின் தலை­மைகள் மத்­தியில் இணக்­கப்­பாடு எட்­டப்­பட்­டி­ருக்­கின்­றது. தமிழ் மக்­க­ளுக்­கான அர­சியல் தீர்­வா­னது சமஷ்டி கட்­ட­மைப்பை உள்­ள­டக்­கி­ய­தாக அமைய வேண்டும் என்­பதில் பொது­வான இணக்­கத்தை கண்­டுள்ள தமிழ் தேசியக் கட்­சி­களின் தலை­மைகள், அதற்­கு­ரிய திட்­ட­வ­ரைவு தொடர்பில் தொடர்ந்தும் கலந்­து­ரை­யா­டு­வ­தென்றும் தீர்­மா­னித்­துள்­ளனர்.

கடந்த 02ஆம் திகதி திங்­கட்­கி­ழமை தமிழ் சட்­டத்­த­ர­ணிகள் பேர­வையின் ஏற்­பாட்டில் கொழும்பில் தமிழ்த் தேசியக் கட்­சி­களின் தலை­வர்கள் சந்­தித்து கலந்­து­ரை­யா­டி­யி­ருந்­தனர். இந்தச் சந்­திப்பில் இலங்கை தமி­ழ­ரசுக் கட்­சியின் சார்பில் அதன் செய­லாளர் எம்.ஏ. சுமந்­திரன், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான எஸ். சிறி­தரன், எஸ்.ரவி­கரன் ஆகி­யோரும் தமிழ் தேசிய மக்கள் முன்­ன­ணியின் சார்பில் அதன் தலைவர் கஜேந்­தி­ர­குமார் பொன்­னம்­பலம், ஜன­நா­யகத் தமிழ் தேசியக் கூட்­ட­ணியில் அங்கம் வகிக்கும் ரெலோவின் சார்பில் அதன் தலைவர் செல்வம் அடைக்­க­ல­நாதன், செய­லாளர் கரு­ணா­கரம், பேச்­சாளர் சுரேந்­திரன் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எவ். தலைவர் சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் ஆகியோர் பங்­கேற்­றி­ருந்­தனர்.

தமிழ் சட்­டத்­த­ர­ணிகள் பேர­வையின் சார்பில் அதன் ஒருங்­கி­ணைப்­பாளர் க.ச.இரத்­தி­னவேல், பேரா­சி­ரியர் அ.சர்­வேஸ்­வரன் உட்­பட்டோர் கலந்­து­கொண்­டி­ருந்­தனர்.

இந்தச் சந்­திப்பில் தமிழ் மக்­களின் அபி­லா­ஷை­களை பூர்த்தி செய்யும் வகையில் அவர்­க­ளுக்­கான அர­சியல் தீர்வு, சமஷ்டி கட்­ட­மைப்பை கொண்­ட­தாக இருக்க வேண்டும் என்­பதில் சக­லரும் இணங்­கி­யுள்­ளனர். அந்த தீர்வு தொடர்பில் கலந்­து­ரை­யா­டல்­களை நடத்தி திட்­ட­வ­ரை­வொன்­றினை தயா­ரிப்­ப­தற்கும் இணக்கம் எட்­டப்­பட்­டி­ருக்­கின்­றது.

தமிழ் மக்கள் தமது உரி­மை­களை நிலை­நாட்­டு­வ­தற்­காக இலங்கை சுதந்­தி­ர­ம­டைந்­த­தி­லி­ருந்து போராடி வரு­கின்­றனர். அன்று தமிழ் மித­வாதத் தலை­வர்கள் அஹிம்சா வழியில் போராட்­டங்­களை நடத்­தி­யி­ருந்­தனர். அந்தப் போராட்­டங்கள் தெற்கின் அரசின் தலை­மை­க­ளினால் செவி­சாய்க்­கப்­ப­டா­த­தை­ய­டுத்து தமிழ் இளை­ஞர்கள் 1980களில் ஆயுதப் போராட்­டத்தை ஆரம்­பிக்கும் நிலைமை ஏற்­பட்­டி­ருந்­தது.

மூன்று தசாப்­த­ கா­ல­மாக தமிழ் மக்­களின் உரி­மை­களைப் பெறு­வ­தற்­காக ஆயுதப் போராட்டம் இடம்­பெற்­றது. இந்தப் போராட்­ட­மா­னது நாட்டை பேர­ழி­வுக்குள் இட்டுச் சென்­றி­ருந்­தது. யுத்தம் முடி­வுக்குக் கொண்­டு­வ­ரப்­பட்­டி­ருந்த நிலையில் 2009ஆம் ஆண்டு முதல் மீண்டும் ஜன­நா­யக வழி­யி­லான போராட்­டங்­களில் தமிழ் மக்கள் ஈடு­பட்டு வரு­கின்­றனர்.

எட்டு தசாப்­தங்கள் நிறை­வ­டைந்­துள்ள போதிலும் தமிழ் மக்­க­ளுக்கு அர­சியல் தீர்வு என்ற விட­ய­மா­னது இன்­னமும் கானல் நீரா­கவே இருந்து வரு­கின்­றது. மாறி மாறி ஆட்­சிக்கு வந்த அர­சாங்­கங்கள் அர­சியல் தீர்வு குறித்து கலந்­து­ரை­யா­டல்­களை நடத்­திய போதிலும் அவற்­றினால் எத்­த­கைய பயனும் ஏற்­ப­ட­வில்லை.

பல்­வேறு பேச்­சுகள் நடத்­தப்­பட்டு, அர­சியல் தீர்வுத் திட்­டங்கள் தயா­ரிக்­கப்­பட்ட போதிலும் யோச­னைகள் முன்­வைக்­கப்­பட்ட போதிலும் அவை எவை­யுமே நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. அதற்­கான சூழலும் ஏற்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை.

தற்­போது தேசிய மக்கள் சக்தி அர­சாங்கம் ஆட்சி அமைத்­துள்ள நிலையில் இனப்­பி­ரச்­சி­னைக்­கான அர­சியல் தீர்வு காணப்­படும் என்று அர­சாங்கம் உறு­தி­ய­ளித்­துள்­ளது. புதிய அர­சி­ய­ல­மைப்­பினை உரு­வாக்­கு­வதன் மூலம் இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சியல் தீர்வு காணப்­படும் என்று தேசிய மக்கள் சக்­தி­யா­னது கடந்த ஜனா­தி­பதித் தேர்­தலின் போதும் பாரா­ளு­மன்றத் தேர்­தலின் போதும் வாக்­கு­று­தி­களை வழங்­கி­யி­ருந்­தது.

ஆனால், அர­சாங்கம் ஆட்­சி­ய­மைத்து ஒன்­றரை வருடம் பூர்த்­தி­ய­டைந்­துள்ள போதிலும் இன்­னமும் அர­சியல் தீர்வு தொடர்­பிலோ அல்­லது புதிய அர­சி­ய­ல­மைப்பு குறித்தோ உரிய கலந்­து­ரை­யா­டல்கள் இடம்­பெ­ற­வில்லை.

புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான முயற்­சிகள் ஜன­வரி மாதம் முதல் ஆரம்­பிக்­கப்­படும் என்று அர­சாங்கத் தரப்பில் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்த போதிலும் அதற்­கான ஆக்­க­பூர்­வ­மான நட­வ­டிக்­கைகள் எதுவும் இது­வரை எடுக்­கப்­ப­ட­வில்லை. வெறும் வாக்­கு­று­தி­களை வழங்­கி­யுள்ள அர­சாங்கம் அவற்றை நிறை­வேற்­று­வ­தற்கு நட­வ­டிக்கை எடுப்­ப­தா­கவும் தெரி­ய­வில்லை.

இந்த நிலையில் இனப்­பி­ரச்­சி­னைக்­கான அர­சியல் தீர்வு தொடர்பில் அக்­கறை செலுத்­து­மாறு அர­சாங்­கத்தை தமிழ்த் தேசியக் கட்­சி­களின் தலை­மைகள் வலி­யு­றுத்த வேண்­டிய நிலைமை காணப்­ப­டு­கின்­றது. அதற்­கான அழுத்­தங்­களை கொடுக்க வேண்­டிய சூழல் உரு­வா­கி­யுள்­ளது.

அர­சியல் தீர்­வுக்­கான அழுத்­தங்­களை ஒரு பக்கம் கொடுத்துக் கொண்டு தமிழ் மக்­களின் அர­சியல் தீர்வு தொடர்­பான தமிழ்த் தேசியக் கட்­சி­களின் பொது­வான நிலைப்­பாடு என்ன என்­பது தொடர்பில் ஓர் தீர்க்­க­மான நிலைப்­பாட்­டுக்கு வர வேண்­டி­யது இன்­றி­ய­மை­யா­த­தா­க­வுள்­ளது.

இந்த விட­யத்தில் தமிழ்த் தேசியக் கட்­சி­களின் தலை­மைகள் அனைத்தும் ஒன்­று­கூடி, ஒற்­று­மை­யாக தமிழ் மக்­க­ளுக்­கான அர­சியல் தீர்வு இதுதான் என்று வலி­யு­றுத்தும் வகையில் திட்­ட­வ­ரைவொன்றை தயா­ரிக்க வேண்­டி­யது இன்­றி­ய­மை­யா­த­தா­க­வுள்­ளது.

இந்த விட­யத்தில் தமிழ்த் தேசியக் கட்­சி­களின் தலை­மைகள் அக்­கறை கொண்­டுள்ள போதிலும் அதனை ஒன்­றி­ணைந்து தயா­ரிக்கும் விட­யத்தில் இழு­பறி நிலைமை காணப்­பட்டே வந்­தது.

கடந்த சில மாதங்­க­ளுக்கு முன்னர் அர­சியல் தீர்வு தொடர்பில் பொது­வான இணக்­கப்­பாட்டை எட்­டு­வ­தற்கு தமிழ் தேசிய மக்கள் முன்­ன­ணியின் தலைவர் கஜேந்­தி­ர­குமார் பொன்­னம்­பலம் நட­வ­டிக்­கையில் இறங்­கி­யி­ருந்தார். ஆனால், இந்த முயற்சி வெற்­றி­ய­ளித்­தி­ருக்­க­வில்லை.

இதனைத் தொடர்ந்து இலங்கை தமி­ழ­ரசுக் கட்­சியும் ஜன­நா­யக தமிழ்த் தேசியக் கூட்­ட­ணியும் புதிய அர­சியலமைப்பு தொடர்­பிலும் தமிழ் மக்­களின் அர­சியல் தீர்வு குறித்தும் பொது­வான ஆவ­ண­மொன்றை தயா­ரிப்­ப­தற்கு இணக்கம் கண்­டி­ருந்­தனர். இது குறித்து சில கலந்­து­ரை­யா­டல்­களும் இரு தரப்­பி­ன­ருக்கும் இடையில் இடம்­பெற்­றி­ருந்­தன. ஏனைய கட்­சி­க­ளையும் இந்த முயற்­சியில் ஒன்­றி­ணைப்­பது என்றும் தீர்­மா­னிக்­கப்­பட்­டி­ருந்­தது.

ஆனாலும், ஏனைய கட்­சி­களை ஒன்­றி­ணைக்கும் முயற்சி வெற்­றி­ய­ளித்­தி­ருக்­க­வில்லை. இந்த நிலையில் தமிழ்த் தேசியக் கட்­சி­களின் தலை­மை­களை அழைத்து பேச்­சு­வார்த்தை ஒன்­றினை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு இலங்­கை­யி­லுள்ள சுவிட்­ஸர்­லாந்து தூத­ரகம் முயற்­சியை மேற்­கொண்­டி­ருந்­தது.

இவ்­வா­றான ஒரு முயற்­சியை மேற்­கொள்­ளு­மாறு இலங்கை தமி­ழ­ரசுக் கட்­சி­யி­னரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்­ன­ணி­யி­னரும் கோரிக்கை விடுத்­தி­ருந்­த­தா­கவே தெரி­கின்­றது. இந்தப் பேச்­சு­வார்த்தை கடந்த மாதம் 19ஆம் திகதி நடை­பெ­று­வ­தற்கு ஏற்­பா­டா­கி­யி­ருந்­தது. ஆனால், அர­சியல் தீர்வு தொடர்பில் கட்­சி­களின் மற்றும் சிவில் சமூகத் தரப்­பி­ன­ருடன் கலந்­து­ரை­யா­டு­வ­தற்­கான கூட்­ட­மொன்­றினை தமிழ்த் தேசிய மக்கள் முன்­னணி கடந்த மாதம் 15ஆம் திகதி ஏற்­பாடு செய்­த­தை­ய­டுத்து சுவிட்­ஸர்­லாந்து தூத­ர­கத்தின் ஏற்­பாட்டில் இடம்­பெ­ற­வி­ருந்த சந்­திப்பை இரத்துச் செய்­யு­மாறு தமி­ழ­ரசுக் கட்­சியின் செய­லாளர் சுமந்­திரன் கோரி­ய­தற்கு இணங்க அந்தச் சந்­திப்பு இரத்துச் செய்­யப்­பட்­டி­ருந்­தது.

அர­சியல் தீர்வு தொடர்பில் தமிழ்த் தேசியக் கட்­சி­க­ளி­டையே ஒரு­மித்த நிலைப்­பாட்டை ஏற்­ப­டுத்தும் இந்த முயற்சி தோல்­வியில் முடிந்­தி­ருந்­தது.

இத­னை­ய­டுத்­துதான் தற்­போது தமிழ் சட்­டத்­த­ர­ணிகள் பேர­வை­யா­னது மீண்­டு­மொரு முயற்­சியை ஆரம்­பித்­தி­ருக்­கின்­றது. இந்தக் கூட்­டத்தில் தமிழ்த் தேசியக் கட்­சி­களின் தலை­வர்கள் பங்­கேற்­ற­மையும் சமஷ்டி தீர்வை வலி­யு­றுத்தும் வகையில் திட்­ட­ வ­ரை­வொன்றை தயா­ரிக்க இணங்­கி­ய­மையும் வர­வேற்­கத்­தக்க நட­வ­டிக்­கை­க­ளே­யாகும்.

ஆனாலும் இந்த பேச்­சு­வார்த்­தையில் சகல தமிழ்த் தேசியக் கட்­சி­களின் தலை­வர்­களும் அழைக்­கப்­ப­ட­வில்லை என்ற குற்­றச்­சாட்டும் தற்­போது சுமத்­தப்­ப­டு­கின்­றது. சி.வி.விக்­னேஸ்­வரன் தலை­மை­யி­லான தமிழ் மக்கள் கூட்­டணி உட்­பட வேறு சில கட்­சி­க­ளுக்கு அழைப்பு விடுக்காமை தவறு என்ற தொனியில் கருத்துக்களும் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

உண்மையிலேயே இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பில் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் ஒன்றிணைக்கப்பட்டு அரசியல் தீர்வுக்கான திட்டவரைவு தயாரிக்கப்படுவதே சிறந்ததாகும்.

தற்போதைய நிலையில் இலங்கை தமிழரசுக் கட்சியும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியும் இந்த விடயத்தில் ஒன்றிணைந்து செயற்படுவதற்கு ஏற்கனவே இணங்கியிருந்தன. ஆனால், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியே இந்த விடயத்தில் தனி வழிப் போக்கை கொண்டிருந்தது.

எனவே, இந்த இரு தரப்புக்கும் இடையில் முதலில் முழுமையான இணக்கப்பாடு எட்டப்பட வேண்டியது அவசியமாகவுள்ளது.

அதனைத் தொடர்ந்து ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைமைகளும் ஒன்றிணைக்கப்பட்டு அரசியல் தீர்வு தொடர்பான பொதுவான திட்டவரைவு  தயாரிக்கப்பட வேண்டும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனாதிபதிக்கான கம்பன் விருதும் தமிழ் மக்களின்...

2026-05-10 15:14:37
news-image

இந்திய துணை ஜனாதிபதியின் ஒற்றுமைக்கான அழைப்பு

2026-04-26 10:45:41
news-image

தற்போதைய மோசடி தொடர்பில் உடனடி விசாரணையே...

2026-04-19 12:15:35
news-image

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகளை நிலைநிறுத்துங்கள்

2026-04-11 18:26:09
news-image

தமிழ்த் தேசியக் கட்­சி­க­ளுக்­கி­டையில் பொது இணக்­கப்­பாடு...

2026-04-05 10:38:09
news-image

மத்திய கிழக்கு மோதல் விவகாரத்தில் நடுநிலைமை...

2026-03-29 11:34:39
news-image

எரி­சக்தி நெருக்­க­டிக்கு தீர்வு காண்­ப­தற்கு தேசிய...

2026-03-22 15:06:40
news-image

உலகளாவிய நெருக்கடியை சந்திக்க தயாராக வேண்டும்

2026-03-15 13:55:18
news-image

தமிழ்த் தேசியக் கட்சிகளிடையே ஏற்பட்டுள்ள இணக்கம்...

2026-03-08 12:09:56
news-image

புதிய அர­சி­ய­ல­மைப்பு விவ­கா­ரத்தில் அக்­க­றை­யற்­றி­ருக்கும் அர­சாங்கம்

2026-03-01 12:37:43
news-image

இன ஒற்றுமைக்கான செயற்பாட்டுடன் தமிழர் பிரச்சினைக்கு...

2026-02-23 11:17:39
news-image

தமிழ் மக்­களின் உணர்­வு­களை புரிந்­து­கொள்­வது அவ­சியம்

2026-02-15 16:24:39