சம்பியன்ஸ் லீக்: சம்பியன் பட்டத்திற்கு கடும் போட்டி; இன்றும் நாளையும் தீர்மானம் மிக்க போட்டிகள்

07 Mar, 2026 | 03:09 PM
image

(நெவில் அன்தனி)

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் நடத்திவரும் சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டத்தில் சம்பியன் பட்டத்திற்கு கடும் போட்டி நிலவுகிறது.

கொழும்பு குதிரைப் பந்தயத் திடலில் ஒவ்வொரு வார இறுதியிலும் நடைபெற்றுவரும் சம்பியன்ஸ் லீக் சுப்பர் 8 சுற்றில் கடைசிக் கட்டத்திற்கு முந்தைய கட்டம் இந்த வாரம் நடைபெறவுள்ளது.

இன்றும் நாளையும் ஆறாம் கட்டத்தில் நடைபெறவுள்ள நான்கு போட்டிகளும் சம்பியனைத் தீர்மானிக்கக் கூடியவையாக அமைய வாய்ப்புள்ளது.

இதன் காரணமாக இன்றும் நாளையும் நடைபெறவுள்ள கால்பந்தாட்டப் போட்டிகள் பெரும் பரபரப்பையும் விறுவிறுப்பையும் ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சுற்றுப் போட்டியில் குருநாகல் பெலிக்கன்ஸ் கழகம் மாத்திரமே முதலாம் சுற்றிலும் தற்போது நடைபெற்றுவரும் சுப்பர் 8 சுற்றிலும் தோல்வி அடையாத அணியாக இருக்கிறது. அத்துடன் சம்பியனாவதற்கு அனுகூலமான அணியாகவும் பெலிக்கன்ஸ் கழகம் கருதப்படுகிறது.

இதேவேளை முதல் சுற்றில் தோல்வியைத் தழுவியபோதிலும் சுப்பர் 8 சுற்றில் மிகத் திறமையாக விளையாடி தோல்வி அடையாமல் இருக்கும் மற்றொரு அணியான கொம்பனித் தெரு ஜாவா லேன் கழகமும் சம்பியன் பட்டதை வெல்லக்கூடிய அணியாக காணப்படுகிறது.

கடந்த வாரம் நிறைவுபெற்ற 5ஆம் கட்ட சுப்பர் 8 சுற்று போட்டி முடிவுகளை அடுத்து அணிகள் நிலையில் பெலிக்கன்ஸ் (11 புள்ளிகள்), ஜாவா லேன் (9), செரெண்டிப் (7), சோண்டர்ஸ் (6), சென். மேரிஸ் (6), சொலிட் (6) ஆகிய அணிகள் முதல் 6 இடங்களில் இருக்கின்றன.

பெலிக்கன்ஸ், ஜாவா லேன் ஆகிய அணிகளைவிட மற்றைய 4 அணிகளுக்கும் சம்பியனாகக்கூடிய வாய்ப்புகள் இருக்கத்தான் செய்கின்றன.

ஐந்து புள்ளிகளுடன் 7ஆம் இடத்தில் இருக்கும் நியூ ஸ்டார் கழகமும் கடைசி இடத்தில் உள்ள பொலிஸ் கழகமும் சம்பியானவதற்கு வாய்ப்பு இல்லை. மேலும் அவை இரண்டும் தரவரிசையில் முன்னேற முயற்சிக்கவுள்ளன.

இந்த வாரம் நடைபெறவுள்ள போட்டிகளில் பெலிக்கன்ஸ் கழகம் வெற்றிபெற்று ஜாவா லேன், செரெண்டிப் கழகங்கள் தோல்விகளைத் தழுவினால் பெலிக்கன்ஸ் கழகம் சம்பியனாகும்.

ஒருவேளை பெலிக்கன்ஸ் கழகம் தோல்வி அடைந்து மற்றைய இரண்டு அணிகளும் வெற்றிபெற்றால் கடைசிக் கட்ட போட்டிகளே சம்பியன் அணியைத் தீர்மானிக்கும்.

இந்த மூன்று அணிகளும் தோல்வி அடைந்து சோண்டர்ஸ், யாழ். நாவாந்துறை சென். மேரிஸ் அல்லது சொலிட் ஆகிய அணிகள் வெற்றிபெற்றால் சம்பியன் பட்டத்திற்கு பெலிக்கன்ஸ், ஜாவா லேன், சோண்டர்ஸ், சென்.  மேரிஸ்   அல்லது  சொலிட்  ஆகியவற்றுக்கு இடையில் நான்கு முனை போட்டி நிலவும்.

ஒருவேளை பெலிக்கன்ஸ் கழகம் வெற்றிபெற்று மற்றைய அணிகள் சம்பந்தப்பட்ட போட்டிகள் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தால் பெலிக்கன்ஸ் கழகம் சம்பியனாகும்.

எனவே இந்த வாரம் நடைபெறவுள்ள நான்கு போட்டிகளும் விறுவிறுப்பையும் பரபரப்பையும் எற்படுத்தும் என்பதால்

இந்த 8 கழங்களினதும் ரசிகர்கள் பெருமளவில் மைதானத்திற்கு வருகை தந்து தங்களது அணிகளுக்கு உற்சாகம் ஊட்டுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

சனிக்கிழமை (07-03) போட்டிகள்

செரெண்டிப் எதிர் நியூ ஸ்டார் (பி.ப. 4.00 மணி)

ஜாவா லேன் எதிர் பொலிஸ் (இரவு 8.00 மணி)

ஞாயிற்றுக்கிழமை (08-03)   போட்டிகள்

சென். மேரிஸ் எதிர் சொலிட் (பிற்பகல் 4.00 மணி)

பெலிகன்ஸ் எதிர் சோண்டர்ஸ் (இரவு 8.00 மணி)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஐசிசி அங்குரார்ப்பண மகளிர் சவால் கிண்ண...

2026-04-17 18:02:57
news-image

19 வயதுக்குட்பட்ட பெண்கள் மும்முனை ரி20...

2026-04-17 16:33:18
news-image

குவின்டன்  டி கொக் குவித்த அபார...

2026-04-17 05:47:10
news-image

பங்களாதேஷ் செல்லவுள்ள இலங்கை மகளிர் குழாம்...

2026-04-16 19:06:39
news-image

நியூஸிலாந்து ஏ அணியுடனான உத்தியோகப்பற்றற்ற டெஸ்டில்...

2026-04-16 18:55:58
news-image

இலங்கை விளையாட்டுத்துறையில் பெண்களுக்கு தேசிய ஒலிம்பிக்...

2026-04-16 16:27:53
news-image

பெங்களூருவின் பந்துவீச்சில் சரிந்தது லக்னோவ்; அணிகள்...

2026-04-15 23:47:23
news-image

108ஆவது அகில இங்கிலாந்து சிரேஷ்ட (மாஸ்டர்ஸ்)...

2026-04-15 17:22:54
news-image

ஒன்பது விஸ்டன் விருதுகளில் ஏழு விருதுகளை...

2026-04-15 16:39:56
news-image

உலக கிரிக்கெட் வீரர்கள் சங்கத்தின் வீரர்கள்...

2026-04-15 14:40:20
news-image

நூர் அஹ்மதின் துல்லிய பந்துவீச்சின் உதவியுடன்...

2026-04-15 00:09:03
news-image

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் தடுமாறிய ராஜஸ்தான் றோயல்ஸ்...

2026-04-14 03:51:27