"முழு நாடுமே ஒன்றாக" தேசிய திட்டம்: ஒரே நாளில் 1,073 பேர் கைது!

Published By: Digital Desk 1

07 Mar, 2026 | 02:07 PM
image

ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய, நாட்டில் போதைப்பொருளை தடுக்கும் நோக்கிலான “முழு நாடுமே ஒன்றாக” எனும் தேசிய திட்டத்தின் கீழ், நேற்று வெள்ளிக்கிழமை (06) முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் சுமார் 1,073 பேர் போதைப்பொருட்களுடன் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 

அத்துடன், தடுப்புக்காவல் உத்தரவு பெற்ற 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணைகளுக்கமைய 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை, 1,077 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதுடன், 14 பேர் புனர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்பிவைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளின்போது சிக்கிய சந்தேகநபர்கள் வைத்திருந்த போதைப்பொருட்களையும் இதன்போது பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

அதற்கமைய, சந்தேக நபர்களிடமிருந்து, 01 கிலோகிராம் 381 கிராம் ஹெரோயின், 667 கிராம் ஐஸ், 500 கிராம் கொக்கெய்ன், 05 கிலோகிராம் 192 கிராம் கஞ்சா, 26,580 கஞ்சா செடிகள், 31 கிராம் குஷ் ரக போதைப்பொருள், 118 கிராம் ஹஷீஷ் ரக போதைப்பொருள், 342 போதை மாத்திரைகள், 08 கிலோகிராம் 832 கிராம் மதனமோதகம் மற்றும் 628 கிராம் மாவா போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.       

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மன்னாரில் விபத்தில் உயிரிழந்த பெண்குழந்தை :...

2026-04-21 16:27:15
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி...

2026-04-21 16:19:25
news-image

தீபச்செல்வனின் 5 வகையான நூல்கள் தடுத்து...

2026-04-21 15:41:48
news-image

கால்நடைகள் மீது காரைநகரில் அடாவடி ;...

2026-04-21 15:41:27
news-image

பயாகலையில் “குடு சலிந்துவின்” நெருங்கிய சகாக்கள்...

2026-04-21 15:26:29
news-image

பிள்ளையான் மீதான உயிர்த்த ஞாயிறு குற்றச்சாட்டுகள்...

2026-04-21 15:26:07
news-image

யாழில் போலி காணி உறுதி தயாரிப்பு...

2026-04-21 15:22:29
news-image

மாகும்புரவில் இருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமையுடன் புதிய...

2026-04-21 15:16:08
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நிபந்தனையற்ற நீதி...

2026-04-21 14:58:36
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் அரசியல்...

2026-04-21 14:50:48
news-image

'கஞ்சிபானை இம்ரான்' உடன் தொடர்புடைய முக்கிய...

2026-04-21 14:49:33
news-image

வவுனியாவில் டித்வா புயலினால் பகுதியளவில் சேதமடைந்த...

2026-04-21 14:49:11