இரவில் சட்டவிரோதமாக சுழியோடி கடல் அட்டைகளை பிடித்த 4 பேர் கடற்படையினரால் கைது 

06 Mar, 2026 | 06:22 PM
image

இலங்கை கடற்படையினர், மன்னாரின் தெற்கு கடல் பகுதியில் புதன்கிழமை (4) காலை நடத்திய தேடுதல் நடவடிக்கையின்போது,  சட்டவிரோதமாக இரவு நேர சுழியோடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 4 பேரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.  

அவர்களிடமிருந்து 437 கடல் அட்டைகள், ஒரு  டிங்கி படகு, சுழியோடி உபகரணங்களை கடற்படையினர் கைப்பற்றினர்.  

அதன்படி, மன்னார் தெற்கு பகுதிக்கு அப்பால் உள்ள கடல் பகுதியில், வட மத்திய கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பலா கஜபா நடத்திய இந்த சிறப்பு தேடுதல் நடவடிக்கையின்போது, சந்தேகத்திற்கிடமான ஒரு டிங்கி படகு பரிசோதிக்கப்பட்டது. 

இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மன்னார் பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்கள் 32 முதல் 48 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் சந்தேக நபர்களும் கைப்பற்றப்பட்ட பொருட்கள் அனைத்தும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் மீன்வள ஆய்வாளரிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புத்தாண்டு காலப்பகுதியில் மாத்திரம் 42 விபத்துகளில்...

2026-04-16 22:09:21
news-image

இந்த ஆண்டுக்குள் மாகாணசபைத் தேர்தல் ?...

2026-04-16 15:42:25
news-image

நவீன கால விகடகவி சஜித்தை வைத்து...

2026-04-16 15:29:04
news-image

அதிகளவு கரும்புகையை வெளியேற்றும் வாகனங்கள் தொடர்பில்...

2026-04-16 18:42:17
news-image

மத்திய கிழக்கு போர்ச்சூழலில் நாளை நாட்டுக்கு...

2026-04-16 17:46:54
news-image

வாவியில் நீராடிய இருவர் நீரில் மூழ்கி...

2026-04-16 17:43:42
news-image

பெருமளவான போதைப்பொருளுடன் தெற்கு கடலில் மீன்பிடிப்...

2026-04-16 17:21:19
news-image

வாகன இலக்கத் தகடு விதிமுறை மீறல்...

2026-04-16 17:01:38
news-image

வெடுக்குநாறி மலை தமிழர்களின் பூர்வீக நிலம்...

2026-04-16 16:50:37
news-image

ஆட்பதிவுத் திணைக்கள சேவைகள் நாளை இடைநிறுத்தம்!

2026-04-16 16:36:45
news-image

நாடு பாரிய வீழ்ச்சியை நோக்கிச் செல்கிறது...

2026-04-16 16:08:09
news-image

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீதான...

2026-04-16 16:11:03