ஈரான் கப்பல் மீதான தாக்குதல் குறித்து அமெரிக்கா முன்னதாகவே அறிவித்ததா? ; உண்மையை நாட்டுக்கு வெளிப்படுத்துமாறு ஐ.தே.க. வலியுறுத்தல்

06 Mar, 2026 | 05:06 PM
image

(எம்.மனோசித்ரா)

ஈரான் கப்பல் மீதான தாக்குதல் குறித்து அமெரிக்கா முன்னதாகவே அறிவித்ததா என்பதை அரசாங்கம் நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும். அதேவேளை இனிமேல் இத்தகைய இராணுவ நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாது என்பதற்கான உறுதியை இலங்கை அரசாங்கம் அமெரிக்காவிடமிருந்து பெற்றுக்கொள்ள வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சி வலியுறுத்தியுள்ளது.

வெள்ளிக்கிழமை (6) ஐக்கிய தேசிய கட்சி விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது :

எமது பிரத்தியேக பொருளாதார வலயத்துக்குள் ஈரானிய கப்பல் ஒன்று அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலினால் மூழ்கடிக்கப்பட்டமை குறித்து அரசாங்கம் தொடர்ச்சியாக மௌனம் காப்பது கவலைக்குரியது. 

நாட்டின் பிரத்தியேக பொருளாதார வலயத்துக்குள்ளும், கொழும்பு பாதுகாப்பு பிணைப்பின் எல்லைக்குள்ளும் மேற்கொள்ளப்பட்ட இந்த இராணுவ நடவடிக்கை குறித்து, அதற்கு முன்னதாக அமெரிக்காவினால் தமக்கு அறிவிக்கப்பட்டதா என்பதை அரசாங்கம் நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும்.

இந்த நடவடிக்கைகள் எமது பிரத்தியேக பொருளாதார வலயத்தை ஒரு போர்க்களமாக மாற்றியுள்ளன. இது எமது வர்த்தக நலன்களில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும். கப்பல் போக்குவரத்துச் செலவுகள் மற்றும் காப்புறுதி கட்டணங்கள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதுடன், இது நாட்டின் பொருளாதாரம் மற்றும் வாழ்க்கைச் செலவு ஆகியவற்றிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

இலங்கைக்கு அண்மித்த பகுதிகளில் இனிமேல் இத்தகைய இராணுவ நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாது என்பதற்கான உறுதியை இலங்கை அரசாங்கம் அமெரிக்காவிடமிருந்து பெற்றுக்கொள்ள வேண்டும். அத்துடன், இதனால் ஏற்படக்கூடிய பொருளாதாரத் தாக்கம் குறித்து சம்பந்தப்பட்ட கப்பல் நிறுவனங்கள் மற்றும் காப்புறுதி அதிகாரிகளுடன் அரசாங்கம் கலந்துரையாட வேண்டும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்த ஆண்டுக்குள் மாகாணசபைத் தேர்தல் ?...

2026-04-16 15:42:25
news-image

நவீன கால விகடகவி சஜித்தை வைத்து...

2026-04-16 15:29:04
news-image

அதிகளவு கரும்புகையை வெளியேற்றும் வாகனங்கள் தொடர்பில்...

2026-04-16 18:42:17
news-image

மத்திய கிழக்கு போர்ச்சூழலில் நாளை நாட்டுக்கு...

2026-04-16 17:46:54
news-image

வாவியில் நீராடிய இருவர் நீரில் மூழ்கி...

2026-04-16 17:43:42
news-image

பெருமளவான போதைப்பொருளுடன் தெற்கு கடலில் மீன்பிடிப்...

2026-04-16 17:21:19
news-image

வாகன இலக்கத் தகடு விதிமுறை மீறல்...

2026-04-16 17:01:38
news-image

வெடுக்குநாறி மலை தமிழர்களின் பூர்வீக நிலம்...

2026-04-16 16:50:37
news-image

ஆட்பதிவுத் திணைக்கள சேவைகள் நாளை இடைநிறுத்தம்!

2026-04-16 16:36:45
news-image

நாடு பாரிய வீழ்ச்சியை நோக்கிச் செல்கிறது...

2026-04-16 16:08:09
news-image

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீதான...

2026-04-16 16:11:03
news-image

முறிகண்டியில் புகையிரதத்துடன் கார் மோதி விபத்து:...

2026-04-16 15:45:20