பன்முகத்தன்மை கொண்ட நிறுவனங்களின் குழுமமான சன்ஷைன் ஹோல்டிங்ஸ், முழு குழுமத்திற்கும் புதிய மனித வள முகாமைத்துவ அமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இது, குழுமத்தின் விரிவான டிஜிட்டல் மாற்றம் மற்றும் நிர்வாக முயற்சிகளில் ஒரு முக்கிய படியாகும்.
இந்த புதிய அமைப்பு அண்மையில் கொழும்பில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஷியாம் சதாசிவம், சிரேஷ்ட தலைமைத்துவ குழுக்கள், திட்டத்திற்கு பொறுப்பான குழுக்கள், சன்ஷைன் உறுப்பினர்கள் மற்றும் தொழில்நுட்ப ஆதரவு குழுக்கள் / தொழில்நுட்ப நிறுவனங்களின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
இந்த அமைப்பினை ஏற்கனவே சுகாதார மற்றும் நுகர்வோர் துறைகளைச் சேர்ந்த 1,700க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர்.
அத்துடன் அடுத்த கட்டங்களில் இந்த அமைப்பு மற்ற வணிகப் பிரிவுகளுக்கும் விரிவுபடுத்தப்படவுள்ளது.
சன்ஷைன் ஹோல்டிங்ஸின் தொடர்ச்சியான வளர்ச்சி மற்றும் விரிவான செயல்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் இந்த புதிய அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நிறுவனமானது, தமது உறுப்பினர்களை திறமையான முறையில் நிர்வகிக்கவும், வெளிப்படைத் தன்மையுடன் செயல்படவும், முழு குழுமத்திலும் வலுவான தீர்மானங்களை எடுக்கவும் ஒத்துழைக்கும் வகையில் ஒரு ஒருங்கிணைந்த டிஜிட்டல் அமைப்பை உருவாக்குகிறது.
சன்ஷைன் ஹோல்டிங்ஸ் குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஷியாம் சதாசிவம் இது குறித்து கருத்து தெரிவிக்கையில், “சன்ஷைனின் எதிர்கால வளர்ச்சியானது, தமது உறுப்பினர்களை எவ்வளவு சிறப்பாக நிர்வகித்து மேம்படுத்துகிறது என்பதிலேயே தங்கியுள்ளது. இந்த புதிய அமைப்பு ஒரு முக்கியமான நீண்டகால முதலீடாகும். உறுப்பினர்கள் மற்றும் நிறுவனம் ஆகிய இரண்டும் ஒரே நேரத்தில் வளர்ச்சியடைந்து தெளிவான மற்றும் செயல்திறன் மிக்க நிறுவனத்தை கட்டியெழுப்ப இந்த அமைப்பு கைகொடுக்கிறது.
எமது உறுப்பினர்கள் தங்கள் பணிகளை குழுமத்தின் இலக்குகளுடன் இணைக்கும் போது, முழு குழுமத்தின் எதிர்காலத்தையும் நாங்கள் வலுப்படுத்த செயல்படுகிறோம்” என தெரிவித்தார்.
நிறுவனத்தின் பரிணாம பயணத்தின் ஒரு பகுதியாக, சன்ஷைன் ஹோல்டிங்ஸ், கடுமையான தேர்வு செயல்முறைக்குப் பின்னர், இந்த புதிய அமைப்பின் முதன்மை தொழில்நுட்ப தளமாக, Oracle Human Capital Management (HCM) நிறுவனத்தின் பாதுகாப்பான Cloud தீர்வு தெரிவு செய்தது. இது, குழுமம் முழுவதும் பணியாளர்களை நிர்வகிப்பதற்கும், பணியாளர் தரவு பகுப்பாய்வு மற்றும் சிறந்த நிறுவன திட்டமிடலுக்கும் ஆதரவளிக்கும்.
“நிறுவனம் விஸ்தரிக்கப்பட்டு, சிக்கல் நிறைந்ததாக மாறும்போது, அதன் உள் அமைப்புகளும் மேம்படுவதால், அவற்றை நமது உறுப்பினர்கள் மற்றும் வணிக நடவடிக்கைகளின் வளர்ச்சிக்கு ஏற்றவாறு மாற்றியமைக்க வேண்டும். இந்த புதிய அமைப்பு, நமது பணியாளர்களை ஆதரிக்கும் அமைப்புகளை வலுப்படுத்துவதோடு, சிறந்த இணைப்பையும் ஏற்படுத்த அனுமதிக்கிறது.
மேலும், நிறுவனம் ஒரே சீரான நிலைத்தன்மையுடன் பணியாளர்களை நிர்வகிக்கும் அதேநேரம், குழுமத்தின் எதிர்காலத் திட்டங்களுக்கு ஏற்ப தேவையான அனுபவத்தை உறுப்பினர்களுக்கு வழங்குகிறது” என சன்ஷைன் ஹோல்டிங்ஸ் குழுமத்தின் தலைமை பணியாளர் மற்றும் நிறுவன தகவல் தொடர்பு அதிகாரி மிஷேல் சேனாநாயக்க தெரிவித்தார்.
குழுமத்தின் மனித வளம், டிஜிட்டல் மற்றும் வணிகக் குழுக்கள் உட்பட இந்த அமைப்பை நிறுவுவதில் ஆதரவளித்த வெளிப்புற கூட்டாளர்களுடனான நெருங்கிய ஒத்துழைப்புடன் இந்த அமைப்பு செயல்படுத்தப்பட்டது. இதன் மூலம் குறித்த அமைப்பானது, உலகளாவிய சிறந்த நடைமுறைகள், உள்ளூர் செயல்பாட்டுத் தேவைகள் மற்றும் நிறுவன கலாசாரத்திற்கு ஏற்ப அமைவதை உறுதி செய்தது.
“நிலையான மாற்றம் என்பது உரிமை, ஒத்துழைப்பு மற்றும் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தும் முன்னரே நாம் பணியாற்றும் முறையை மேம்படுத்துவதில் இருந்து ஆரம்பிக்கிறது. இந்த அமைப்பை வலுப்படுத்தவும், நன்கு கட்டமைக்கப்பட்ட டிஜிட்டல் அடித்தளத்தை உருவாக்கவும் அனைத்துக் குழுக்களும் அர்ப்பணிப்புடன் செயல்படுகின்றன. இது எங்கள் உறுப்பினர்களுக்குத் தொடர்ந்து ஆதரவளிப்பதோடு, முழு குழுமத்தினதும் எதிர்கால மாற்றத்திற்கு உதவுமென நாம் நம்புகின்றோம்” என சன்ஷைன் ஹோல்டிங்ஸ் குழுமத்தின் தலைமை டிஜிட்டல் அதிகாரி இன்ஃபியாஸ் அலி கூறினார்.
இந்த புதிய அமைப்பு, நிறுவனத்தின் பணிகளை சிறப்பாக நிர்வகிப்பதற்கும், மிகவும் திறமையாக செயல்படுவதற்கும், உறுப்பினர்களின் ஈடுபாட்டை அதிகரிப்பதற்கும் உதவுகிறது. எதிர்கால வளர்ச்சிக்குத் தயாராகும் வகையில், டிஜிட்டல் மயமாக்கப்பட்ட மற்றும் மக்களை மையமாகக் கொண்ட நிறுவனமாக மாறுவதற்கான சன்ஷைன் ஹோல்டிங்ஸின் நீண்டகால இலக்கை இது எடுத்துக்காட்டுகிறது.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM