( எஸ். ரிலீவரன் )
இலங்கை அச்சகத்தார் சங்கம் ஏற்பாடு செய்த 'MSMEs 2025 விருது வழங்கல் விழா' மார்ச் மாதம் 03ஆம் திகதி செவ்வாய்க்கிழமை, கொழும்பிலுள்ள பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இலங்கையின் அச்சுத் துறையில் ஈடுபட்டுள்ள நுண், சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சியாளர்களின் திறமைகள், புத்தாக்கம் மற்றும் பங்களிப்பை அங்கீகரித்துக் கௌரவிப்பதை நோக்கமாக கொண்டு இந்த விருது வழங்கள் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த விழாவில் பல்வேறு பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டன. அச்சுத் தரம், வடிவமைப்பு, புத்தாக்கம் மற்றும் வர்த்தக வளர்ச்சி ஆகியவற்றின் அடிப்படையில் வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
அச்சுத் துறையில் சிறந்து விளங்கும் நிறுவனங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில் Arissona Advertising and Publication நிறுவனம் தனது சிறப்பான பணிக்காகச் சிறப்பு விருதைப் பெற்றுக்கொண்டது.
அத்துடன், புத்தகத் தயாரிப்பு, பொதியிடல் (Packaging), வணிக அச்சு மற்றும் டிஜிட்டல் அச்சு போன்ற துறைகளில் சாதனை படைத்த MSME நிறுவனங்களுக்கும் இதன்போது விருதுகள் வழங்கப்பட்டன.
இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர், அச்சுத் துறை எதிர்கொண்ட சவால்களுக்கு மத்தியில், சிறு தொழில்முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த விழா ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.
இலங்கையின் அச்சுத் தரத்தை சர்வதேச மட்டத்திற்கு உயர்த்துவதே இந்த சங்கத்தின் நீண்டகால இலக்காக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த விருது வழங்கள் விழாவில், கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி, இலங்கை அச்சகத்தார் சங்கத்தின் தலைவர் ஜனக்க ரத்னகுமார, முன்னாள் தலைவர் அனில் காரியவசம், முதலாம் உப தலைவர் நிஸாந்த பெரேரா, இரண்டாம் உப தலைவர் செந்தில்நாதன், செயலாளர் சாமர விதானகே, பொருளாளர் ஹர்ஷ கயான், இலங்கை அச்சகத்தார் சங்கத்தின் அங்கத்தினர்கள், ஏற்பாட்டு குழுவினர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
( படப்பிடிப்பு ஜே. சுஜீவகுமார் )



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM