தயாரிப்பு : கலைமகள் புரொடக்ஷன்ஸ்
நடிகர்கள் : வசீகரன், நேகா, போஸ் வெங்கட், 'பசங்க' செந்தி, அமுதவாணன், மீரா கிருஷ்ணன், ரிஷா மற்றும் பலர்.
இயக்கம் : ஆனந்த் சிவம்
மதிப்பீடு : 2/5
தென் தமிழக நிலவியல் பின்னணியில் வாழும் மாயாண்டி ( போஸ் வெங்கட்) - பாக்கியம் ( 'பசங்க' செந்தி தம்பதியினரின் ஒரே செல்ல மகன் செல்வா ( வசீகரன்) . கல்லூரியில் உயர்கல்வி கற்ற செல்வா வேலை வாய்ப்பிற்காக காத்திருக்கும் தருணத்தை வீணடிக்காமல் குடிநீர் சுத்திகரிப்பு கருவியை விற்பனை செய்யும் பிரதிநிதியாக பணியாற்றுகிறார். இவருடன் அண்டா செட்டி @அறிவழகன் ( அமுத வாணன்) எனும் ஆருயிர் நண்பனும் இணைந்து பணியாற்றுகிறார்.
செல்வா தனக்கு வேலை வாய்ப்பை வழங்கிய முதலாளியின் மகளான தேவி@ கோப்பெருந்தேவி( நேகா) யை கண்டதும் காதலிக்க தொடங்குகிறார். இந்த காதல் குறித்து செல்வாவின் தாயான பாக்கியம் தன் மகிழ்ச்சியை செல்வாவிடம் வெளிப்படுத்த தாயை வளரிளம் பருவத்தில் இருந்து வெறுக்கும் செல்வா இதை விரும்பவில்லை.
அத்துடன் தாய் என்றும் பாராமல் தடித்த (?)வார்த்தையை பாவித்து தாயின் மனதை சொல்லால் சுடுகிறார். இதனால் ஆத்திரமடையும் தேவி.. செல்வாவிடம் உனது தாயைப் பற்றி உனக்கு என்ன தெரியும்? என கேட்க.. அதை நான் தெரிந்து கொள்ள விருப்பமில்லை என பதிலளிக்க உண்மையில் என்ன நடந்தது ?என்பதை விவரிப்பது தான் படத்தின் கதை.
கிராமிய மண் மணம் கமழும் கதை. ஆனால் அதை அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையிலான திரைக்கதையாக மாற்றி வழங்குவதில் தான் படக்குழுவினர் தவறி இருக்கிறார்கள்.
முதல் பாதியை விட இரண்டாம் பாதியில் விறுவிறுப்பு அதிகம். சுவராசியமும் அதிகம். அதிலும் திருடனான மாயாண்டியை முதிர் கன்னியான பாக்யம் காப்பாற்றுவதும், காதலில் விழுவதும் அசல் கிராமத்து ரசனை.
திருடர்கள் திருடுவார்களே தவிர கொலை செய்ய மாட்டார்கள் என்ற லாஜிக் ஆரோக்கியமாக உள்ள பெண்ணிடமிருந்து கண்தானம் பெறுவது ஆகியவை படு செயற்கை.
செல்வா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர் வசீகரன். நன்றாக நடனமாடுகிறார். அதிரடியாக சண்டையிடுகிறார். ஆனால் நடிப்பு என்று வந்தால் மட்டும் ஷட்டிலாகவும் இல்லாமல் மிகையாகவும் இல்லாமல்... யதார்த்தமாகவும் இல்லாமல்... ???
தேவி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகை நேகா இளமையாக இருக்கிறார் அழகாக தோன்றுகிறார்.. அவ்வளவு தான்.
விஜய் ரிவி ஸ்டாண்ட் அப் கொமடியன் அமுதவாணனின் சில டொயலாக் சின்ன சிரிப்பை உண்டாக்குகிறது.
போஸ் வெங்கட் - 'பசங்க' செந்தி - மீரா கிருஷ்ணன் - தங்களுடைய அனுபவம் மிக்க நடிப்பை வழங்கத் தவறவில்லை.
ஒளிப்பதிவு+ படத்தொகுப்பு+ கலை இயக்கம் ஆகியவை இது சிறிய முதலீட்டு திரைப்படம் என்பதை உறுதி செய்கிறது. பாடல்களை விட பின்னணி இசை பரவாயில்லை.
செல்லமடா நீ எனக்கு - போதாதுடா எங்களுக்கு...!?















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM