தற்போது நடந்து வரும் போரில் 30க்கும் மேற்பட்ட ஈரான் கப்பல்களை அமெரிக்கா தாக்கியுள்ளதாகக் கூறியுள்ள அமெரிக்க உயர் இராணுவ அதிகாரி ஒருவர், இன்று (6) ஈரானிய ட்ரோன் விமானம் தாங்கிக் கப்பலைத் தாக்கியதாகவும் தெரிவித்துள்ளார்.
இன்று தாக்கப்பட்டதாக கூறப்படும் கப்பல், இரண்டாம் உலகப்போரின் விமானம் தாங்கிக் கப்பலின் அளவுடையது. ஈரான் படைகளின் பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் கணிசமாகக் குறைந்துவிட்டன என்றும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.
ஈரான் கடற்படை முழுவதையும் தாக்கி அழிக்கும் போர் நடவடிக்கையில் அமெரிக்கப் படைகள் பின்வாங்கப்போவதில்லை என்று அமெரிக்க இராணுவம் கூறிவருகிறது.
இந்நிலையில், இஸ்ரேல் இராணுவ தளபதி தெரிவிக்கையில், 6ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆயுதங்களுடன் 2500 தாக்குதல்களை நடத்திய பிறகு ஈரானுடனான போரில் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்துள்ளோம்” என்றார்.
மேலும், நேற்று நள்ளிரவு முதல் இன்று அதிகாலை வரை இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களில் ஈடுபட்டது. அதை தடுக்க, இஸ்ரேல் வான்பாதுகாப்பு அமைப்பு தீவிரமாக செயற்பட்டது. இருந்தபோதிலும் இஸ்ரேலுக்குள் சில ஏவுகணைகள் விழுந்து வெடித்தன. இதனால் இஸ்ரேல் முழுவதும் தாக்குதலுக்கான அபாய ஒலிகள் எழுப்பப்பட்டன.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM