இயக்குநராகவும் , நடிகராகவும் தனித்துவமான அடையாளத்தை பதிவு செய்து ரசிகர்களின் கவனத்தை கவர்ந்து வரும் செல்வராகவன் கதையின் நாயகனாக- கதையை வழி நடத்திச் செல்லும் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'மனிதனும் தெய்வமாகலாம்' எனும் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர் தனுஷ் அவருடைய சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'மனிதனும் தெய்வமாகலாம்' திரைப்படத்தில் செல்வராகவன், குஷி ரவி, ஆர் எஸ் சதீஷ், கௌசல்யா, மைம் கோபி, வை. ஜி மகேந்திரா, லிர்த்திகா, சேலம் தீபக், சுதா, ஜோதி கண்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கே. ரவிவர்மா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஏ.கே. பிரியன் இசையமைத்திருக்கிறார்.
எளிய மனிதனின் வாழ்வியல் பின்னணியில் எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை வியோம் என்டர்டெய்ன்மெண்ட்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் விஜயா சதீஷ் மற்றும் ஆர் எஸ் சதீஷ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
இப்படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் தருணத்தில் இதன் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் எளிய மனிதனின் வாழ்வாதாரம் அரசியல் மற்றும் ஆதிக்க வர்க்கத்தால் சுரண்டப்படுவதும், அதற்கு எளிய மக்களின் பதில் தாக்குதலை மையப்படுத்தி காட்சிகள் இடம் பிடித்திருப்பதால் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்திருக்கிறது.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM