ஏப்ரலில் வெளியாகும் சமுத்திரக்கனி - கௌதம் வாசுதேவ் மேனன் இணைந்து பயணிக்கும் 'கார்மேனி செல்வம் '

06 Mar, 2026 | 03:22 PM
image

இயக்குநர்களாக முத்திரை பதித்து நடிகர்களாகவும் மின்னும் கலைஞர்களான சமுத்திரக்கனி - கௌதம் வாசுதேவ் மேனன் இணைந்து நடித்திருக்கும் 'கார்மேனி செல்வம் '  திரைப்படம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் பட மாளிகையில் வெளியாகும் என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இயக்குநர் ராம் சக்ரி இயக்கத்தில் உருவாகியுள்ள 'கார்மேனி செல்வம்' திரைப்படத்தில் சமுத்திரக்கனி, கௌதம் வாசுதேவ் மேனன், லட்சுமி பிரியா சந்திரமௌலி, படவா கோபி, ரக்ஷிதா சுரேஷ், அர்ஜுனன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

யுவராஜ் தக்ஷின் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு மியூசிக்லௌட் ஸ்டுடியோஸ் & டெக்னாலஜி  நிறுவனம் இசையமைத்திருக்கிறது.

சாலை மார்க்கமான பயணத்தையும், வாடகை வாகனத்தை இயக்கும் சாரதியையும் மையப்படுத்தி ஃபீல் குட் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை பாத்வே புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அருண் ரங்கராஜுலு தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டிற்கு தயாராகி இருக்கும் நிலையில் இந்தத் திரைப்படம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் மூன்றாம் திகதி முதல் உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதற்காக விளம்பரப்படுத்தப்படும் பதாகையில் சமுத்திரக்கனி மற்றும் கௌதம் வாசுதேவ் மேனனின் தோற்றம் - படத்தை பட மாளிகையில் காண வேண்டும் என்ற விருப்பத்தை உண்டாக்கி இருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்