நடிகை பிரியங்கா மோகன் நடிக்கும் 'மேட் இன் கொரியா' படத்தின் முன்னோட்டம் வெளியீடு

06 Mar, 2026 | 03:22 PM
image

ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ரா. கார்த்திக் இயக்கத்தில் நடிகர் பிரியங்கா மோகன் மற்றும் தென் கொரிய நாட்டு கலைஞர்களின் நடிப்பில் உருவாகியுள்ள 'மேட் இன் கொரியா'  திரைப்படம் படமாளிகையில் வெளியாகாமல் நேரடியாக நெட்பிளிக்ஸ் டிஜிட்டல் தளத்தில் எதிர்வரும் 12 ஆம் திகதி அன்று வெளியாகிறது.

தற்போது இதற்கான முன்னோட்டம் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இதனை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இயக்குநர் ரா. கார்த்திக்- நடிகை பிரியங்கா மோகன் - தயாரிப்பாளர் சாகர் ஆகியோர் பங்கு பற்றினர்.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், '' தமிழகத்தின் சிறிய ஊரில் வசிக்கும் செண்பா எனும் சிறுமி தென் கொரியா நாட்டிற்கு பயணிக்க வேண்டும் என கனவு காண்கிறார். அந்த கனவை நனவாக்குவதற்காக அவள் தென்கொரியாவிற்கு பல தடைகளை கடந்து பயணம் மேற்கொள்கிறார்.

அங்கு அவர் சந்தித்த சம்பவங்களும் , அதனூடாக பெற்ற அனுபவங்களும் தான் இப்படத்தின் மைய புள்ளி. இதை பீல் குட் ஃபேமிலி என்டர்டெய்னராக உருவாக்கி இருக்கிறோம்.  தமிழ் ரசிகர்கள் டிஜிட்டல் தளங்களில் வெளியாகும் கொரிய நாட்டின் தொடர்களை பார்த்து ரசிக்கின்றனர்.

அவர்களை கவரும் வகையிலும், தமிழ் ரசிகர்களுக்கு புதிய நிலவியல் பின்புலமான கொரிய  நாடு - அதன் கலாச்சார செழுமை- மக்களின் வாழ்வியல்- மக்களின் சமூகம் சார்ந்த அக்கறை - மக்களின் நம்பிக்கை- விருந்தோம்பல்- ஆகிய விடயங்களை இப்படத்தின் திரைக்கதையில் இடம் பெறச் செய்திருக்கிறோம். தமிழ் ரசிகர்களுக்கு அசலான அற்புதமான திரை அனுபவத்தை 'மேட் இன் கொரியா' வழங்கும் என உறுதியாக நம்புகிறோம்'' என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்