யாழ். படகு விபத்து ; அவசர விசாரணை முன்னெடுக்குமாறு பணிப்புரை விடுத்தார் கடற்றொழில் அமைச்சர்

Published By: Digital Desk 3

06 Mar, 2026 | 03:07 PM
image

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற படகு விபத்துக்கான முழுமையான காரணங்களைக் கண்டறியும் வகையில், கடற்படையினர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் இணைந்து அவசர விசாரணைகளை முன்னெடுக்குமாறு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் பணிப்புரை விடுத்துள்ளார்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அமைச்சர் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ளார். துயரத்தில் இருக்கும் குடும்பங்களுக்கு அரசாங்கம் சார்பில் தேவையான அனைத்து உதவிகளும் விரைந்து வழங்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

விபத்துக்குள்ளான படகு கடற்பயணத்திற்குப் பாதுகாப்பான நிலையில் இருந்ததா?, பயணிகளின் எண்ணிக்கை விதிமுறைகளுக்கு உட்பட்டு அமைந்திருந்ததா?, கடல் பயணத்திற்கான பாதுகாப்பு நடைமுறைகள் (உயிர் காப்பு அங்கிகள் போன்றவை) முறையாகப் பின்பற்றப்பட்டதா? என்பன குறித்து விரிவாக ஆராய்ந்து  அறிக்கை சமர்ப்பிக்குமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

மீட்பு நடவடிக்கைகளில் எந்தவிதத் தாமதமும் ஏற்படக்கூடாது. கிடைக்கக்கூடிய அனைத்து வளங்களையும் பயன்படுத்தி தேடுதல் பணிகளைத் தீவிரப்படுத்துமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக யாழ். மாவட்ட கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள், பொலிஸார் மற்றும் கடற்படையினருடன் அமைச்சர் அவசர கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளார். கடலில் காணாமல் போனவர்களைத் தேடும் பணிகளைத் தீவிரப்படுத்துமாறு அவர் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.

அதேவேளை, விபத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் நிலை குறித்து வைத்தியசாலை அதிகாரிகளுடன் அமைச்சர் நேரடியாகத் தொடர்புகொண்டு கேட்டறிந்துள்ளார்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மே தினக் கூட்டம்: சஜித்திடமிருந்து அழைப்பு...

2026-04-20 16:09:35
news-image

பௌத்த எழுச்சி வட கிழக்கிற்கே அவசியம்...

2026-04-20 17:07:10
news-image

இலங்கை திரும்ப விரும்புவோருக்கான ஒத்துழைப்புக்களை துரிதப்படுத்துங்கள்...

2026-04-20 16:39:59
news-image

நிலக்கரியைப் பால் ஊற்றி வெளுப்பாக்க அரசாங்கம்...

2026-04-20 16:40:28
news-image

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் முழுமையாக அரசியல்மயமாகியுள்ளது...

2026-04-20 17:07:36
news-image

மாகாண சபைத் தேர்தலைத் தள்ளிப்போடும் அரசாங்கம்!...

2026-04-20 17:33:18
news-image

தேசிய கல்வி நிறுவனத்தின் புதிய பணிப்பாளர்...

2026-04-20 21:58:19
news-image

இலங்கை மத்திய வங்கியின் 'வருடாந்த பொருளாதார...

2026-04-20 19:50:09
news-image

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு...

2026-04-20 19:34:33
news-image

மிஹிந்தலையில் பெண்களைத் தாக்கிய விமானப்படை வீரர்...

2026-04-20 17:50:02
news-image

வலுசக்தி அமைச்சராக அநுர கருணாதிலக்க ஜனாதிபதி...

2026-04-20 17:37:55
news-image

யாழ். கட்டளைத் தளபதிக்கும் அரசாங்க அதிபருக்கும்...

2026-04-20 17:32:54