அரச சேவையின் சம்பள முரண்பாடுகளைத் தீர்க்க இந்த ஆண்டு 'சம்பளக் குழு' நிறுவப்படும் - பிரதமர்

Published By: Digital Desk 1

06 Mar, 2026 | 12:37 PM
image

அதிபர் சேவை உள்ளிட்ட அரச சேவையின் பல துறைகளில் நிலவும் சம்பள முரண்பாடுகளுக்குத் தீர்வு காண்பதற்காக, இந்த வருடத்திற்குள் புதிய 'சம்பளக் குழு' ஒன்று நிறுவப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

இன்று வெள்ளிக்கிழமை (06) பாராளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த ஆணைக்குழுவின் ஊடாக அரச சேவையில் நீண்டகாலமாக நிலவும் சம்பளப் பிரச்சினைகளுக்கு நிலையான தீர்வை வழங்க எதிர்பார்ப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

அதிபர் சேவையில் நிலவும் சம்பள முரண்பாடுகள் குறித்து அதிபர் சங்கங்களுடனும், அதிபர்களுடனும் நாம் விரிவான கலந்துரையாடல்களை நடத்தியுள்ளோம். இந்த முரண்பாடுகளுக்குத் தீர்வு காண்பதற்கான முயற்சிகளை நாம் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகிறோம்.

அரசாங்கத்தின் கொள்கையின்படி, இந்த வருடம் ஒரு சம்பளக் குழுவை நியமிக்கவுள்ளோம். அதன் மூலமே நிலையானதொரு தீர்வை எட்ட முடியும். கடந்த காலங்களில் வழங்கப்பட்ட சம்பள அதிகரிப்பு முறையினால் கல்வித் துறையில் மாத்திரமன்றி, அரச சேவையின் பல துறைகளிலும் சிக்கல்கள் எழுந்துள்ளன.

எனவே, ஒட்டுமொத்த அரச சேவைக்கும் ஒரு நிலையான தீர்வை வழங்க இந்தச் சம்பளக் குழு ஊடாக முயற்சிக்கிறோம். குறிப்பாக அதிபர்களின் பிரச்சினைகள் குறித்து இந்த ஆணைக்குழுவிடம் விசேட பரிந்துரைகளை முன்வைக்க நாம் எதிர்பார்த்துள்ளோம் என  பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மே தினக் கூட்டம்: சஜித்திடமிருந்து அழைப்பு...

2026-04-20 16:09:35
news-image

பௌத்த எழுச்சி வட கிழக்கிற்கே அவசியம்...

2026-04-20 17:07:10
news-image

இலங்கை திரும்ப விரும்புவோருக்கான ஒத்துழைப்புக்களை துரிதப்படுத்துங்கள்...

2026-04-20 16:39:59
news-image

நிலக்கரியைப் பால் ஊற்றி வெளுப்பாக்க அரசாங்கம்...

2026-04-20 16:40:28
news-image

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் முழுமையாக அரசியல்மயமாகியுள்ளது...

2026-04-20 17:07:36
news-image

மாகாண சபைத் தேர்தலைத் தள்ளிப்போடும் அரசாங்கம்!...

2026-04-20 17:33:18
news-image

தேசிய கல்வி நிறுவனத்தின் புதிய பணிப்பாளர்...

2026-04-20 21:58:19
news-image

இலங்கை மத்திய வங்கியின் 'வருடாந்த பொருளாதார...

2026-04-20 19:50:09
news-image

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு...

2026-04-20 19:34:33
news-image

மிஹிந்தலையில் பெண்களைத் தாக்கிய விமானப்படை வீரர்...

2026-04-20 17:50:02
news-image

வலுசக்தி அமைச்சராக அநுர கருணாதிலக்க ஜனாதிபதி...

2026-04-20 17:37:55
news-image

யாழ். கட்டளைத் தளபதிக்கும் அரசாங்க அதிபருக்கும்...

2026-04-20 17:32:54