(நெவில் அன்தனி)
மும்பை வான்கேட் விளையாட்டரங்கில் தற்போது நடைபெற்றுவரும் இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் சஞ்சு செம்சன் குவித்த அபார அரைச் சதத்தின் உதவியுடன் இந்தியா கணிசமான ஓட்டங்களைக் குவித்துள்ளது.
இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இந்தியா 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 253 ஓட்டங்களைக் குவித்தது.
அபிஷேக் ஷர்மா (9) இன்றைய போட்டியிலும் குறைந்த எண்ணிக்கைக்கு ஆட்டம் இழந்தார். (20 - 1 விக்.)
ஆனால், சஞ்சு செம்சன், இஷான் கிஷான் ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 45 பந்துகளில் 97 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை சிறப்பான நிலையில் இட்டனர்.
இஷான் கிஷான் 18 பந்துகளில் 39 ஓட்டங்களைப் பெற்று வெளியேறினார்.
மொத்த எண்ணிக்கை 160 ஓட்டங்களாக இருந்தபோது சஞ்சு செம்சன் ஆட்டம் இழந்தார்.
சஞ்சு செம்சன் 42 பந்துகளை எதிர்கொண்டு 8 பவுண்டறிகள், 7 சிக்ஸ்களுடன் 89 ஓட்டங்களைக் குவித்தார்.

அணித் தலைவர் சூரியகுமார் யாதவ் (11) பிரகாசிக்கத் தவறினார்.
தொடர்ந்து ஷிவம் டுபே 25 பந்துகளில் ஒரு சிக்ஸ், 4 பவுண்டறிகள் உட்பட 43 ஓட்டங்களையும் திலக் வர்மா 21 ஓட்டங்களையும் ஹார்திக் பாண்டியா 27 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் வில் ஜெக்ஸ் 40 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஆதில் ராஷித் 41 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினார்.
254 ஓடடங்களை வெற்றி இலக்காகக் கொண்டு இங்கிலாந்து பதிலுக்கு துடுப்பெடுத்தாடுகிறது.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM