(நெவில் அன்தனி)
இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுநராக முன்னாள் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஜெமி சிடன்ஸை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நியமித்துள்ளது.
இங்கிலாந்தில் இந்த வருடம் ஜூன் மாதம் நடைபெறவிருக்கும் ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டிக்கு இலங்கை மகளிர் அணியை பயிற்றுவிக்கும் பொறுப்பை ஜெமி சிடன்ஸ் ஏற்கவுள்ளார்.
அவரது ஒரு வருட பதவிக் காலம் இம் மாதம் 16ஆம் திகதி அமுலுக்கு வரும் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் ஊடகப் பிரிவு தெரிவித்தது.
அவுஸ்திரேலியா சார்பாக ஒரே ஒரு சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடியுள்ள ஜெமி சிடன்ஸ், முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் துடுப்பாட்டத்தில் அபார ஆற்றல்களை வெளிப்படுத்தி பிற்காலத்தில் பயிற்றுநர் ஆனார்.
பங்களாதேஷ் ஆடவர் அணியின் தலைமை பயிற்றுநராக 2007 முதல் 2011வரை சிடன்ஸ் பணியாற்றியுள்ளார், இது அவரது மிக உயர்ந்த சர்வதேச பயிற்சி அனுபவத்தை எடுத்துக்காட்டுகிறது.
நிலை 3 தகுதி பெற்ற பயிற்றுநர் சிடன்ஸ், 2015 முதல் 2020 வரை தெற்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் (ரெட்பேக்ஸ்) தலைமை பயிற்றுநராகவும், 2011 முதல் 2015 வரை நியூசிலாந்தின் வெலிங்டன் ஃபயர்பேர்ட்ஸ் அணியின் தலைமை பயிற்றுநராகவும் பணியாற்றி இருந்தார்.
அவுஸ்திரேலியாவில் 16 வருடங்கள் முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் துடுப்பாட்டத்தில் அசத்திய ஜெமி சிடன்ஸ், தெற்கு அவுஸ்திரேலியா மற்றும் விக்டோரியா ஆகிய அணிகளின் தலைவராக விளையாடி இருந்தார்.
இலங்கைக்கும் பங்களாதேஷுக்கும் இடையில் ஏப்ரல் - மே மாதங்களில் நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடர்களுக்கு அணியை தயார்படுத்துவதே ஜெமி சிடன்ஸின் முதலாவது பணியாகும்.
அவுஸ்திரேலியாவில் 180 முதல்தர போட்டிகளில் விளையாடியுள்ள ஜெமி சிடன்ஸ், 35 சதங்கள், 53 அரைச் சதங்கள் உட்பட 11587 ஓட்டங்களை மொத்தமாக குவித்துள்ளார்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM