இசையமைப்பாளரும், நடிகருமான ஹிப் ஹாப் ஆதி தமிழா கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'மீசைய முறுக்கு 2 'திரைப்படத்தில் இடம்பெற்ற 'ஆரா பத்துக்கு பத்து' எனும் முதல் பாடலும், பாடலுக்கான விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் ஹிப் ஹாப் ஆதி தமிழா இயக்கத்தில் உருவாகியுள்ள 'மீசைய முறுக்கு 2 'படத்தில் ஹிப் ஹாப் ஆதி தமிழா, சைத்ரா ஜே அச்சார், யோகி பாபு, கருணாஸ், ஹர்ஷத் கான், ஆடுகளம் நரேன், நாசர், ஷா ரா, ரம்யா ரங்கநாதன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
பாலாஜி சுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி தமிழா இசையமைத்திருக்கிறார். கொமர்சல் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை அவ்னி மூவிஸ் மற்றும் பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் குஷ்பூ சுந்தர் மற்றும் ஏ சி எஸ் அருண்குமார் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் 'நான் ரொம்ப லிட்டு மச்சான் அவ என் வேவரிட்டு சீன போட்டு சுத்து...' எனத் தொடங்கும் முதல் பாடலும், பாடலுக்கான காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்தப் பாடலை பாடலாசிரியர்கள் தமிழ் ஆதவன் மற்றும் ஹிப் ஹாப் ஆதி தமிழா ஆகியோர் இணைந்து எழுத , ஹிப் ஹாப் தமிழா இசையமைத்து பாடியிருக்கிறார். இந்தப் பாடல் வழக்கம் போல் அவருடைய துள்ளலிசை பாணியில் அமைத்திருப்பதால்.. இளம் தலைமுறை ரசிகர்களின் உற்சாகமான நடனத்துக்குரிய பட்டியலில் இடம் பிடித்திருக்கிறது.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM