நடிகர் கலையரசன் நடிக்கும் 'கொலைச்சேவல்' படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு

05 Mar, 2026 | 04:02 PM
image

தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி தனக்கான ரசிகர்களையும், சந்தை மதிப்பையும் உருவாக்கி வரும் நடிகர் கலையரசன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ' கொலைச்சேவல்' எனும் திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இயக்குநர் துடிவாணன் வி ஆர் இயக்கத்தில் உருவாகியுள்ள ' கொலைச்சேவல் 'எனும் திரைப்படத்தில் கலையரசன், தீபா பாலு, பால சரவணன், ஆதவ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பி ஜி முத்தையா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாந்தன் இசையமைத்திருக்கிறார்.

கிராமப்புற பின்னணியிலான பொழுதுபோக்கு சித்திரமாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஆர்பி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர் பி பாலா மற்றும் கௌசல்யா பாலா ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இப்படத்தில் அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டிற்கு தயாரான நிலையில் இந்தத் திரைப்படம் எதிர்வரும் 13 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதற்காக வெளியிடப்பட்டிருக்கும் போஸ்டரில் கதையின் நாயகன் தன்னுடைய கர்ப்பிணி மனைவியை ஆதரவுடன் அரவணைத்து இருப்பது போல் வடிவமைக்கப்பட்டிருப்பது எளிய மனிதர்களின் எதார்த்தமான வாழ்வியலை பேசும் படைப்பு என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்