(நெவில் அன்தனி)
ஸ்ரீலங்கா அத்லெட்டிக்ஸ் (இலங்கை மெய்வல்லுநர்) நிறுவனத்தினால் இந்த வருடம் நடத்தப்படவுள்ள கனிஷ்ட தேசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் பங்குபற்ற விரும்பும் மெய்வல்லுநர்களிடம் இருந்து விண்ணங்கள் கோரப்படுகிறது.
இந்த வருட கனிஷ்ட தேசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் தியகம விளையாட்டரங்கில் ஏப்ரல் மாதம் 2, 3, 4, 5ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.
இப் போட்டிகள் ஹொங்கொங்கில் மே மாதம் நடைபெறவுள்ள கனிஷ்ட ஆசிய சம்பியன்ஷிப் மற்றும் சீனாவில் ஜூலை மாதம் நடைபெறவுள்ள 23 வயதுக்குட்பட்ட ஆசிய சம்பியன்ஷிப் ஆகியவற்றுக்கான திறன்காண் போட்டிகளாகவும் அமையும்.
கனிஷ்ட தேசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் 16, 18, 20, 23 வயதுக்குட்பட்ட ஆண், பெண் இருபாலாருக்கும் மெய்வல்லுநர் போட்டிகள் நடைபெறவுள்ளன.
இப் போட்டிகளில் பங்குபற்ற விரும்பும் மெய்வல்லுநர்கள் தங்களது பாடசாலைகள் அல்லது கழகங்கள் ஊடாக அல்லது நேரடியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப முடிவு திகதி மார்ச் 20ஆம் திகதி ஆகும். தாமதமாக அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
விண்ணப்பப் படிவங்களை ஸ்ரீலங்கா அத்லெட்டிக்ஸ் நிறுவனத்திடமிருந்து பெற்றுக்கொள்ளலாம். அல்லது Sri Lanka Athletics Facebook இலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
1500 மீற்றர் அல்லது அதற்கு மேற்பட்ட தூரங்களைக் கொண்ட நிகழ்ச்சிகளில் பங்குபற்றுபவர்கள் செல்லுபடியாகும் ஈ சி ஜி அறிக்கைகளை போட்டிக்கு முன்னர் சமர்ப்பிக்கவேண்டும்.
ஒருவர் அதிகபட்சமாக 3 தனிநபர் நிகழ்ச்சிகளில் பங்குபற்ற அனுமதிக்கப்படுவார்.
ஒவ்வொரு வயது பிரிவிலும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் விண்ணப்பங்கள் தனித்தனியாக சமர்ப்பிக்கப்படவேண்டும்.
ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் அனுமதி கட்டணமாக 1,000 ரூபா அறவிடப்படும்.
அனுமதிக் கட்டணங்கள் Sri Lanka Athletics என்ற பெயருக்கு காசோலை மூலம் செலுத்தப்பட்டவேண்டும். அல்லது கணக்கு இல: 2955763, இலங்கை வங்கி, சுதந்திர கிளை, கொழும்பு 7 என்ற வங்கி கணக்கில் வைப்பிலிட்டு ரசீதை அனுப்பிவைக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:
Sri Athletics, No. 33, Independence Avenue, Colombo - 7.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM