ஐசிசியின் இணக்கப்பாட்டுடன் கிரிக்கெட் தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் - விளையாட்டுத்துறை அமைச்சர்

05 Mar, 2026 | 12:44 PM
image

இலங்கை கிரிக்கெட் விளையாட்டைக் கட்டியெழுப்புவதற்காக சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ICC) இணக்கப்பாட்டுடன் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் சர்வதேச கிரிக்கெட் பேரவையுடன் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு வருவதாகவும் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே தெரிவித்தார்.

விளையாட்டுத்துறை அமைச்சில் இன்று வியாழக்கிழமை (05) காலை நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

சர்வதேச கிரிக்கெட் பேரவையுடன் இது தொடர்பான கலந்துரையாடல்கள் தற்போது நடைபெற்று வருவதாகவும், அந்த பேச்சுவார்த்தைகளில் ஜனாதிபதியும் கலந்துகொள்வதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

ஊடக சந்திப்பில் கிரிக்கெட்டுக்கு இடைக்கால நிருவாக சபை நியமிக்கப்படுமா? தகுதிவாய்ந்த அதிகாரி ஒருவர் நியமிககப்படுவாரா? என எழுப்பப்பட்ட கேள்விககு பதிலளித்த அமைச்சர்,

'சர்வதேச கிரிக்கெட் பேரவையின் இணக்கப்பாட்டுடன் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். இலங்கை கிரிக்கெட் மீதான தடையுடன் விளையாட்டை மேம்படுத்த முடியாது என்பதால், விளையாட்டைப் பாதுகாத்துக்கொண்டு கிரிக்கெட்டை அபிவிருத்தி செய்வது குறித்து கவனம் செலுத்தப்படும்.  கிரிக்கெட் விளையாட்டை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளது. அதற்கான சில நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளது. எதிர்காலத் திட்டங்கள் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும்' என்றார்.

கிரிக்கெட் விளையாட்டைக் கட்டியெழுப்பும் பொறுப்பை அரசாங்கம் என்ற ரீதியில் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், அதனை எவர் மீதும் திணித்துவிட்டு ஒதுங்கிவிட முடியாது என்றும் அமைச்சர் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேசிய ஒலிம்பிக் குழு தேர்தல்: ஜஸ்வர்...

2026-04-20 10:52:16
news-image

ஐசிசி அங்குரார்ப்பண மகளிர் சவால் கிண்ண...

2026-04-17 18:02:57
news-image

19 வயதுக்குட்பட்ட பெண்கள் மும்முனை ரி20...

2026-04-17 16:33:18
news-image

குவின்டன்  டி கொக் குவித்த அபார...

2026-04-17 05:47:10
news-image

பங்களாதேஷ் செல்லவுள்ள இலங்கை மகளிர் குழாம்...

2026-04-16 19:06:39
news-image

நியூஸிலாந்து ஏ அணியுடனான உத்தியோகப்பற்றற்ற டெஸ்டில்...

2026-04-16 18:55:58
news-image

இலங்கை விளையாட்டுத்துறையில் பெண்களுக்கு தேசிய ஒலிம்பிக்...

2026-04-16 16:27:53
news-image

பெங்களூருவின் பந்துவீச்சில் சரிந்தது லக்னோவ்; அணிகள்...

2026-04-15 23:47:23
news-image

108ஆவது அகில இங்கிலாந்து சிரேஷ்ட (மாஸ்டர்ஸ்)...

2026-04-15 17:22:54
news-image

ஒன்பது விஸ்டன் விருதுகளில் ஏழு விருதுகளை...

2026-04-15 16:39:56
news-image

உலக கிரிக்கெட் வீரர்கள் சங்கத்தின் வீரர்கள்...

2026-04-15 14:40:20
news-image

நூர் அஹ்மதின் துல்லிய பந்துவீச்சின் உதவியுடன்...

2026-04-15 00:09:03