அண்மையில் நேபாளத்தில் மண்சரிவாலும், வெள்ளப்பெருக்காலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலங்கை 50 ஆயிரம் டொலர் நிதியை வழங்க தீர்மானித்துள்ளது.

நேபாளத்திற்கான இலங்கை தூதுவர் சொர்ண பெரேரா அந் நாட்டு அரசிடம் கையளிக்கவுள்ளார் என வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவிக்கின்றது.

அண்மையில் இடம்பெற்ற அனர்த்தங்களால் நேபாளத்தில் 17 இலட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அந் நாட்டு அனர்த்த முகாமைத்துவ மையம் புள்ளி விபரத்தை வெளியிட்டுள்ளது.