கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது!

Published By: Digital Desk 1

05 Mar, 2026 | 08:00 AM
image

யாழ்ப்பாணம் - கைட்ஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுருவில் கடற்கரைப் பகுதியில், கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று புதன்கிழமை (04) பகல் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

இதன்போது, சுமார் 368 கிலோகிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

கைட்ஸ் பொலிஸார், கடற்படை மற்றும் பொலிஸ் விசேட பிரிவினருடன் இணைந்து முன்னெடுத்த சுற்றிவளைப்பின் போதே குறித்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. 

கைது செய்யப்பட்டவர் வேலணை பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய ஒருவரென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த கேரள கஞ்சா தொகையானது மீன்பிடி படகு ஒன்றின் மூலம் இந்தியாவிலிருந்து நாட்டிற்கு வரப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். 

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கைட்ஸ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாலைதீவு ஜனாதிபதியின் வருகை, கடற்றொழில் துறையின்...

2026-04-11 11:24:10
news-image

பெற்றோல் வாகனங்களுக்கு கியூ.ஆர் முறைமை இரத்து:...

2026-04-11 12:50:26
news-image

மருத்துவம் மற்றும் பொறியியல் கல்விக்கான தேசிய...

2026-04-11 11:41:44
news-image

உர விவகாரம் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதால்...

2026-04-11 10:21:57
news-image

சர்வதேச எரிசக்தி மற்றும் காலநிலை மாநாட்டில்...

2026-04-11 11:40:27
news-image

நாடளாவிய ரீதியில் விசேட பொலிஸ் நடவடிக்கை:...

2026-04-11 11:38:59
news-image

22 பில்லியன் நிலக்கரி மோசடி :...

2026-04-11 11:45:29
news-image

முல்லைத்தீவில் புதிய மணல் விநியோக முறை:...

2026-04-11 10:03:17
news-image

பாதுகாப்பான குடிநீரை வழங்க இலங்கை கடற்படையின்...

2026-04-11 09:27:18
news-image

வெறும் 50,300 பேருக்கு மாத்திரமே அஸ்வெசும...

2026-04-11 11:12:25
news-image

விலையேற்றத்தால் முடங்கும் பாடசாலை மதிய உணவு...

2026-04-11 10:16:50
news-image

தரமற்ற நிலக்கரி கொள்வனவு விவகாரம் தொடர்பில்...

2026-04-11 10:57:45