தென் ஆபிரிக்காவை சிதறடித்து ஃபின் அலன் குவித்த சாதனைமிகு சதத்தின் உதவியுடன் உலகக் கிண்ண  இறுதிக்குள் நுழைந்தது நியூஸிலாந்து

Published By: Vishnu

05 Mar, 2026 | 01:26 PM
image

(நெவில் அன்தனி)

கொல்கத்தா ஈடன் கார்ட்ன்ஸ் விளையாட்டரங்கில் புதன்கிழமை (04) நடைபெற்ற ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண அரை இறுதிப் போட்டியில் ஃபின் அலன் குவித்த அற்புதமான சாதனைமிகு ஆட்டம் இழக்காத சதத்தின் உதவியுடன் 9 விக்கெட்களால் அமோக வெற்றியீட்டிய நியூஸிலாந்து இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றது.

ரி20 உலகக் கிண்ண வரலாற்றில் நியூஸிலாந்து  இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றது இது  இரண்டாவது தடவையாகும்.

இதற்கு முன்னர் 2021 இறுதிப் போட்டியில் நியூஸிலாந்து விளையாடி இருந்தது. அப் போட்டியில் அவுஸ்திரேலியா வெற்றிபெற்று சம்பியனாகியது.

இந்த உலகக் கிண்ணத்தில் அரை இறுதிவரை தோல்வி அடையாமல் இருந்த 2024 உப சம்பியன் தென் ஆபிரிக்கா முதல் தடவையாக தொல்வி அடைந்து ஏமாற்றத்துடனும் கவலையுடனும் வெளியேறியது.

170 ஓட்டங்களை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து எதிரணியின் பந்துவீச்சாளர்களை நாலாபுறமும் சிதறடித்து 12.5 ஓவரக்ளில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 173 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டி இறதிப் போட்டிக்குள் நுழைந்தது.

தென் ஆபிரிக்கா பந்தவீச்சாளர்கள் மீது கொஞ்சமேனும் இறக்கம் காட்டாத ஃபின் அலன் 33 பந்துகளில் 10 பவுண்டறி கள், 8 சிக்ஸ்களை விளாசி ஆட்டம் இழக்காமல் 100 ஓட்டங்களைக் குவித்தார். இது ரி20 உலகக் கிண்ணத்தில் அதிவேக சதமாக பதிவாகியுள்ளது. 

19 பந்துகளில் 50 ஓட்டங்களை எட்டிய அவர், இந்த வருட உலகக் கிண்ணத்தில் பெறப்பட்ட அதிவேக அரைச் சதத்தை சமப்படுத்தினார்.

அவருக்கு இரண்டாவது 50 ஓட்டங்களைப் பூர்த்தி செய்ய 14 பந்துகளே தெவைப்பட்டது.

தனது ஆரம்ப ஜோடி டிம் சீஃபேர்ட்டுடன் 55 பந்துகளில் 117 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்த ஃபின் அலன் மொத்த எண்ணிக்கையில் அரைவாசிக்கும் மேற்பட்ட ஓட்டங்களைக் குவித்தார். 

டிம் சீஃபேர்ட் 33 பந்துகளை எதிர்கொண்டு 7 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 58 ஓட்டங்களைப் பெற்றார்.

ரச்சின் ரவிந்த்ரா 12 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

முன்னதாக இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட தென் ஆபிரிக்கா தடுமாற்றத்துக்கு மத்தியில் 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 169 ஓட்டங்களைப் பெற்றது.

நியூஸிலாந்து பந்துவீச்சாளர்களை எதிர்கொள்வதில் சிரமப்பட்ட தென் ஆபிரிக்கா துடுப்பாட்ட வீரர்களால் சுதந்திரமாக ஓட்டங்களைப் பெற முடியவில்லை.

இரண்டாவது ஓவரில்   மொத்த எண்ணிக்கை 12 ஓட்டங்களாக இருந்தபோது குவின்டன் டி கொக் (10), ரெயான் ரிக்ல்டன் (0) ஆகிய இருவரும் கோல் மெக்கொன்ச்சியின் அடுத்தடுத்த பந்துகளில் ஆட்டம் இழந்தனர்.

இந் நிலையில் அணித் தலைவர் ஏய்டன் மார்க்ராம், டிவோல்ட் ப்ரெவிஸ் ஆகிய இருவரும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி அணியை வீழ்ச்சியிலிருந்து மீட்க கடுமையாக முயற்சித்தனர்.

ஆனால், ஏய்டன் மார்க்ராம் 18 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார்.

தொடர்ந்து மொத்த எண்ணிக்கை 77 ஓட்டங்களாக இருந்தபோது டேவிட் மில்லர் (6), டிவோல்ட் ப்ரெவிஸ் (34) ஆகிய இருவரும் மூன்று பந்துகள் இடைவெளியில் ஆட்டம் இழந்தனர்.

இதன் காரணமாக இரண்டாவது தடவையாக தென் ஆபிரிக்கா நெருக்கடியில் வீழ்ந்தது.

இதனை அடுத்து ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ் (29), மார்க்கோ ஜென்சன் ஆகிய இருவரும் முதலில்  நிதானத்துடனும் பின்னர் அதிரடியாகவும் துடுப்பெடுத்தாடி 6ஆவது விக்கெட்டில் 73 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை ஓரளவு கௌரவமான நிலையில் இட்டனர்.

மிகவும் நெருக்கடியான சூழ்நிலையில் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய மார்க்கோ ஜென்சன் 30 பந்துகளை எதிர்கொண்டு 2 பவுண்டறிகள், 5 சிக்ஸ்கள் உட்பட 55 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

பந்துவீச்சில் கோல் மெக்கொன்ச்சி ஒரு ஓவர் மாத்திரம் வீசி 9 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

அவரை விட ரச்சின் ரவிந்த்ரா 29 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மெட் ஹென்றி 34 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகன்: ஃபின் அலன்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேசிய ஒலிம்பிக் குழு தேர்தல்: ஜஸ்வர்...

2026-04-20 10:52:16
news-image

ஐசிசி அங்குரார்ப்பண மகளிர் சவால் கிண்ண...

2026-04-17 18:02:57
news-image

19 வயதுக்குட்பட்ட பெண்கள் மும்முனை ரி20...

2026-04-17 16:33:18
news-image

குவின்டன்  டி கொக் குவித்த அபார...

2026-04-17 05:47:10
news-image

பங்களாதேஷ் செல்லவுள்ள இலங்கை மகளிர் குழாம்...

2026-04-16 19:06:39
news-image

நியூஸிலாந்து ஏ அணியுடனான உத்தியோகப்பற்றற்ற டெஸ்டில்...

2026-04-16 18:55:58
news-image

இலங்கை விளையாட்டுத்துறையில் பெண்களுக்கு தேசிய ஒலிம்பிக்...

2026-04-16 16:27:53
news-image

பெங்களூருவின் பந்துவீச்சில் சரிந்தது லக்னோவ்; அணிகள்...

2026-04-15 23:47:23
news-image

108ஆவது அகில இங்கிலாந்து சிரேஷ்ட (மாஸ்டர்ஸ்)...

2026-04-15 17:22:54
news-image

ஒன்பது விஸ்டன் விருதுகளில் ஏழு விருதுகளை...

2026-04-15 16:39:56
news-image

உலக கிரிக்கெட் வீரர்கள் சங்கத்தின் வீரர்கள்...

2026-04-15 14:40:20
news-image

நூர் அஹ்மதின் துல்லிய பந்துவீச்சின் உதவியுடன்...

2026-04-15 00:09:03