(நெவில் அன்தனி)
கொல்கத்தா ஈடன் கார்ட்ன்ஸ் விளையாட்டரங்கில் தற்போது நடைபெற்றுவரும் ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண முதலாவது அரை இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட தென் ஆபிரிக்கா தடுமாற்றத்துக்கு மத்தியில் 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 169 ஓட்டங்களைப் பெற்றது.
10ஆவது ஓவரில் மிகவும் இக்கட்டான நிலையில் இருந்த தென் ஆபிரிக்காவை அபார அரைச் சதம் குவித்த மார்க்கோ ஜென்சன் மீட்டு நல்ல நிலையில் இட்டார்.
தென் ஆபிரிக்காவின் மொத்த எண்ணிக்கை இரண்டாவது ஓவரில் 12 ஓட்டங்களாக இருந்தபோது குவின்டன் டி கொக் (10), ரெயான் ரிக்ல்டன் (0) ஆகிய இருவரும் கோல் மெக்கொன்ச்சியின் அடுத்தடுத்த பந்துகளில் ஆட்டம் இழந்தனர்.
அணித் தலைவர் ஏய்டன் மார்க்ராம், டிவோல்ட் ப்ரெவிஸ் ஆகிய இருவரும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி அணியை வீழ்ச்சியிலிருந்து மீட்க கடுமையாக முயற்சித்தனர்.
ஆனால், ஏய்டன் மார்க்ராம் 18 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார்.
தொடர்ந்து மொத்த எண்ணிக்கை 77 ஓட்டங்களாக இருந்தபோது டேவிட் மில்லர் (6), டிவோல்ட் ப்ரெவிஸ் (34) ஆகிய இருவரும் மூன்று பந்துகள் இடைவெளியில் ஆட்டம் இழந்தனர்.
இதனை அடுத்து ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ் (29), மார்க்கோ ஜென்சன் ஆகிய இருவரும் ஆரம்பத்தில் நிதானத்துடனும் பின்னர் அதிரடியாகவும் துடுப்பெடுத்தாடி 6ஆவது விக்கெட்டில் 73 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு உற்சாகத்தைக் கொடுத்தனர்.
மிகவும் நெருக்கடியான சூழ்நிலையில் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய மார்க்கோ ஜென்சன் 30 பந்துகளை எதிர்கொண்டு 2 பவுண்டறிகள், 5 சிக்ஸ்கள் உட்பட 55 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

பந்துவீச்சில் கோல் மெக்கொன்ச்சி ஒரு ஓவர் மாத்திரம் வீசி 9 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
அவரை விட ரச்சின் ரவிந்த்ரா 29 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மெட் ஹென்றி 34 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையம் கைப்பற்றினர்.
170 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு நியூஸிலாந்து துடுப்பெடுத்தாடுகிறது.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM