மேற்கிந்தியத் தீவுகளில் இரண்டு வகை கிரிக்கெட் தொடர்களில் வெற்றியீட்டி வரலாறு படைத்தது இலங்கை மகளிர் அணி

Published By: Vishnu

04 Mar, 2026 | 08:56 PM
image

(நெவில் அன்தனி)

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக நேற்று நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடரின் கடைசிப் போட்டியில் 9 விக்கெட்களால் வெற்றியீட்டிய இலங்கை மகளிர் அணி தொடரை 2 - 0 என்ற ஆட்டக் கணக்கில் கைப்பற்றியது.

சில தினங்களுக்கு முன்னர் மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2 - 1 ஆட்டக் கணக்கில் கைப்பற்றி இருந்த சமரி அத்தபத்து தலைமையிலான இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி, இதன் மூலம் இரண்டு தொடர்களையும் வென்றெடுத்து வரலாறு படைத்தது.

க்றெனடா சென் ஜோர்ஜ் தேசிய கிரிக்கெட் விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்ற கடைசி ரி20 போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் மகளிர் அணியினால் நிர்ணயிக்கப்பட்ட 120 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி 17.4 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 121 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

ஹசினி பெரேரா, சமரி அத்தபத்து (32) ஆகிய இருவரும் 7 ஓவர்களில் 49 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறப்பான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

சமரி ஆட்டம் இழந்த பின்னர் ஹசினி பெரேராவும் இமெஷா துலானியும் பிரிக்கப்படாத 2ஆவது விக்கெட்டில் 72 ஓட்டங்களைப் பகிர்ந்து இலங்கைக்கு இலகுவான வெற்றியை ஈட்டிக்கொடுத்தனர்.

ஹசினி பெரேரா 52 ஓட்டங்களுடனும் இமேஷா துலானி 34 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

முன்னதாக இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் மகளிர் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 119 ஓட்டங்களைப் பெற்றது.

இதில் சினெல் ஹென்றி ஆட்டம் இழக்காமல் 32 ஓட்டங்களையும் டியேந்த்ரா டொட்டின்  28 ஓட்டங்களையும் ஸ்டெஃபானி டெய்லர் 24 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் இனோக்கா ரணவீர 16 ஓட்டங்களுக்கு 2 விக்கெடகளையும் சுகந்திகா குமாரி 32 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகி: ஹசினி பெரேரா.

தொடர்நாயகி: சமரி அத்தபத்து

முதலாவது போட்டி கைவிடப்பட்டது

இந்த இரண்டு அணிகளுக்கு இடையிலான முதலாவது மகளிர் சர்வதேச ரி20 போட்டி மழையினால் இடையில் கைவிடப்பட்டது.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகளை 13.3 ஓவர்களில் 49  ஓட்டங்களுக்கு  இலங்கை மகளிர் அணி சுருட்டியது.

துடுப்பாட்டத்தில் ஒருவர் கூட இரட்டை இலக்க எண்ணிக்கையைப் பெறவில்லை.

பந்துவீச்சில் கவிஷா டில்ஹாரி 5 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் சுகந்திகா குமாரி 8 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் சமரி அத்தபத்து 9 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் இனோகா குமாரி 16 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பதிலக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி 2.5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 7 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் கைவிடப்பட்டது.

இரண்டாவது போட்டியில் இலங்கை வெற்றி

இதே மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இலங்கை மகளிர் அணி 4 விக்டெக்ளால் வெற்றிபெற்றிருந்தது.

எண்ணிக்கை சுருக்கம்

மேற்கிந்தியத் தீவுகள் மகளிர் அணி 20 ஓவர்களில் சகலரும் ஆட்டம் இழந்த 101 (ஹேலி மெத்யூஸ் 28, மல்கி மந்தாரா 16 - 3 விக்., நிலக்ஷிகா சில்வா 20 - 3 விக்., சமரி அத்தபத்து 13 - 2 விக்.)

இலங்கை மகளிர் அணி 18.1 ஓவர்களில் 102 - 8 விக். (சமரி அத்தபத்து 39, ஹசினி பெரேரா 18, கவிஷா டில்ஹாரி 18 ஆ.இ., கியானா ஜோசப் 13 - 2 விக்., அஃபி ஃப்ளெச்சர் 16 - 2 விக்)

ஆட்டநாயகி: சமரி அத்தபத்து

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேசிய ஒலிம்பிக் குழு தேர்தல்: ஜஸ்வர்...

2026-04-20 10:52:16
news-image

ஐசிசி அங்குரார்ப்பண மகளிர் சவால் கிண்ண...

2026-04-17 18:02:57
news-image

19 வயதுக்குட்பட்ட பெண்கள் மும்முனை ரி20...

2026-04-17 16:33:18
news-image

குவின்டன்  டி கொக் குவித்த அபார...

2026-04-17 05:47:10
news-image

பங்களாதேஷ் செல்லவுள்ள இலங்கை மகளிர் குழாம்...

2026-04-16 19:06:39
news-image

நியூஸிலாந்து ஏ அணியுடனான உத்தியோகப்பற்றற்ற டெஸ்டில்...

2026-04-16 18:55:58
news-image

இலங்கை விளையாட்டுத்துறையில் பெண்களுக்கு தேசிய ஒலிம்பிக்...

2026-04-16 16:27:53
news-image

பெங்களூருவின் பந்துவீச்சில் சரிந்தது லக்னோவ்; அணிகள்...

2026-04-15 23:47:23
news-image

108ஆவது அகில இங்கிலாந்து சிரேஷ்ட (மாஸ்டர்ஸ்)...

2026-04-15 17:22:54
news-image

ஒன்பது விஸ்டன் விருதுகளில் ஏழு விருதுகளை...

2026-04-15 16:39:56
news-image

உலக கிரிக்கெட் வீரர்கள் சங்கத்தின் வீரர்கள்...

2026-04-15 14:40:20
news-image

நூர் அஹ்மதின் துல்லிய பந்துவீச்சின் உதவியுடன்...

2026-04-15 00:09:03