அண்மைய ஆய்வின் படி 2020 ஆம் ஆண்டில் உலகளவில் முதியவர்களின் எண்ணிக்கை ஆயிரம் மில்லியனாக இருக்கும். அதில் 200 மில்லியனுக்கும் அதிகமானவர்களாக தெற்காசியர்கள் இருப்பர். ஆணாக இருந்தாலும் சரி அல்லது பெண்ணாக இருந்தாலும் அவர்கள் 60 வயதைக் கடந்துவிட்டால் அவர்களுக்கு வலி ஏற்படுவது இயல்பாகிவிட்டது. இவர்களுக்கு ஏற்படும் வலி மற்றவர்களுக்கு உண்டாகும் வலிகளைவிட வித்தியாசமானது. திசுக்களின் தேய்மானம், எலும்புகளின் தேய்மானம், திசு மற்றும் எலும்புகளின் பலவீனம் ஆகியவற்றால் ஏற்படுவது.
தனிமை, மரண பயம், வாழ்க்கைப் பற்றிய அச்சம், பொருளாதார ரீதியாக மற்றவர்களை சார்ந்திருப்பது அல்லது பற்றாக்குறையுடன் இருப்பது, புற்றுநோய் வலி என இவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால் முதுமை, நோய், இயலாமை ஆகிய 3 காரணிகளால் இவர்கள் பாதிக்கபபடுகிறார்கள். அதேசமயத்தில் இவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகளும் வித்தியாசமானதாகவேயிருக்கவேண்டும்.
உதாரணத்திற்கு மூட்டு வலி என்றால் இவர்கள் பிஸியோதெரபி என்ற நிவாரண சிகிச்சைக்கு ஒத்துழைக்க மாட்டார்கள். அதையும் கடந்து ஒத்துழைத்தால் உடனடியாக பலன் வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். இவர்களுக்கு மருத்துவர்களும், மருத்துவ ஊழியர்களும் மென்மையாகவும், பொறுமையாகவும் தான் சிகிச்சையளிக்கவேண்டும். அப்போது தான் ஓரளவிற்கு ஒத்துழைப்பு அளிப்பார்கள். இவர்களுக்கு தொடர்ச்சியாக உளவியல் சிகிச்சைகள் அவசியம். ஏனெனில் கவனமின்மை, காது கேளாமை, மறதி, உளவியல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும் பாதிக்கப்பட்டிருத்தல், சிகிச்சைகளைப் பற்றி முழுமையான விழிப்புணர்வின்மை என பல காரணங்களால் இவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகளுக்கான பலன்கள் முழுவதுமாக இவர்களுக்கு கிடைப்பதில்லை. சில சிக்கல்களுக்கு சத்திர சிகிச்சை தான் தீர்வு என்றிருக்கும் போது, இவர்கள் வயது அதற்கு பெரும் தடையாக இருப்பதால் இவர்களுக்கு சத்திர சிகிச்சைகளை மேற்கொள்ளமுடிவதில்லை.
வைத்தியர். நடராசன்
தொகுப்பு அனுஷா.
தகவல் : சென்னை அலுவலகம்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM