கடற்றொழில் அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக்கொள்வதற்கான ஒரு நாள் சேவையை ஆரம்பிக்க நடவடிக்கை

Published By: Digital Desk 3

04 Mar, 2026 | 11:17 AM
image

மீனவ சமூகத்திற்கு மிகவும் வினைத்திறனான மற்றும் துரித சேவையை வழங்கும் நோக்கில், கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் தரவு முறைமை மற்றும் ஆட்பதிவுத் திணைக்களத்தின் தேசிய அடையாள அட்டைத் தரவு முறைமை ஆகியவற்றை ஒருங்கிணைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடும் நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை (03) ஆட்பதிவுத் திணைக்களத்தில் நடைபெற்றது.

2020 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் டிஜிட்டல் மயமாக்கல் வேலைத்திட்டத்தின் கீழ், படகு பதிவு, கடற்றொழில் அனுமதிப்பத்திரம் வழங்கல், மீனவர் மற்றும் படகு ஓட்டுநர் அடையாள அட்டை வழங்கல், படகு புறப்படுதல், செய்மதித் தொழில்நுட்பம் ஊடாகப் படகுகளைக் கண்காணித்தல், மீன் அறுவடைத் தரவுகளைச் சேகரித்தல் மற்றும் இணையவழி கொடுப்பனவு முறைமைகள் உள்ளிட்ட பல சேவைகள் இணையவழி முறைமைக்கு மாற்றப்பட்டுள்ளன. 

இந்தத் தரவு முறைமையின் முக்கியத்துவத்தைக் கருத்திற்கொண்டு, அரசாங்கத்தினால் அண்மையில் பிரகடனப்படுத்தப்பட்ட நாட்டின் 37 தேசிய முக்கியத்துவம் வாய்ந்த தகவல் கட்டமைப்புகளில் 11 வது கட்டமைப்பாகக் கடற்றொழில் திணைக்களத்தின் முறைமை பெயரிடப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.

இவ்வருடத்தில் பலநாள் மீன்பிடிக் கலன்களுக்கு மேலதிகமாக ஏனைய மீன்பிடிப் படகுகளுக்கும் இந்த டிஜிட்டல் முறைமைகளை அறிமுகப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன்போது படகு உரிமையாளர்கள் மற்றும் மீனவர்களை முறைமைக்குள் உள்வாங்கும் போது அவர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்திக்கொள்வதில் ஏற்படும் சிக்கல்களைத் தீர்த்துக்கொள்வதே இந்தப் புதிய ஒப்பந்தத்தின் அடிப்படை நோக்கமாகும்.

இந்த ஒப்பந்தத்தின் ஊடாகத் தரவுப் பரிமாற்றத்திற்கான தொழில்நுட்பப் பணிகள் எதிர்காலத்தில் இரு திணைக்களங்களினதும் தகவல் தொழில்நுட்பப் பிரிவுகளினால் மேற்கொள்ளப்படும். இந்த ஒருங்கிணைப்பின் ஊடாகக் கடற்றொழில் திணைக்களத்தின் இணையவழி சேவைகளை விரிவுபடுத்தவும், விசேடமாக கடற்றொழில் அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான 'ஒரு நாள் சேவையை' ஆரம்பிப்பதற்கும் தேவையான அடிப்படை வசதிகள் இதன்மூலம் ஏற்படுத்தப்படும்.

இந்நிகழ்வில் ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் எம்.எஸ்.பி. சூரியப்பெரும, கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எஸ்.ஜே. கஹவத்த, ஆட்பதிவுத் திணைக்களத்தின் மேலதிக ஆணையாளர் நாயகம் கே.எச்.ஜே.எல். சேனாத்ன, ஆணையாளர் (ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி) லக்மாலி ஜயசிங்க, கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் (தகவல் தொழில்நுட்பம்) நுவன் குணவர்தன உள்ளிட்ட இரு நிறுவனங்களினதும் தகவல் தொழில்நுட்பப் பிரிவுகளைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எரிபொருள் 'கியூ.ஆர்' முறைமை மீண்டும் அறிமுகம்:...

2026-03-15 17:46:05
news-image

அமைச்சர் குமார ஜயக்கொடிக்கு எதிராக நம்பிக்கையில்லா...

2026-03-15 17:45:11
news-image

ஈரானின் 'குழப்பமான' வெளிவிவகார கொள்கை: ஐக்கிய...

2026-03-15 17:37:26
news-image

2027ஆம் ஆண்டில் முன்பள்ளிகளுக்காகப் புதிய பாடத்திட்டம்...

2026-03-15 17:29:30
news-image

இந்த அரசாங்கம் எல்லாவற்றையும் தாமதமாகவே செய்து...

2026-03-15 17:28:58
news-image

சமூக ஊடகங்களில் தகவல்களைப் பகிர்வதற்கு முன்னர்...

2026-03-15 17:27:41
news-image

மத்திய கிழக்கின் போர்ச் சூழலுக்கு மத்தியில்...

2026-03-15 17:23:14
news-image

புதிய வாகனங்களுக்கான கியூ.ஆர் குறியீட்டுப் பதிவு...

2026-03-15 16:17:59
news-image

மலையக பெருந்தோட்ட பகுதியில் புதிய வாக்காளரை...

2026-03-15 16:00:41
news-image

சுகாதார அமைச்சர் மருந்து உற்பத்தி நிறுவனத்திற்கு...

2026-03-15 15:37:09
news-image

காரில் கடத்தப்பட்ட மான் மற்றும் குளுமாட்டு...

2026-03-15 15:31:52
news-image

எரிபொருள் கியூ.ஆர் குறியீடு முறை முழுமையாக...

2026-03-15 16:04:28