காலி கடற்பரப்பில் ஈரானிய கப்பல் விபத்து – கடற்படை மீட்பு நடவடிக்கை ஆரம்பம்

Published By: Digital Desk 3

04 Mar, 2026 | 11:00 AM
image

காலி துறைமுகத்திலிருந்து சுமார் 40 கடல் மைல் தொலைவில் உள்ள கடற்பரப்பில் ஈரானுக்குச் சொந்தமான கப்பலொன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த கப்பல் ஈரான் நாட்டுக்குச் சொந்தமானது என பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், கப்பலில் இருந்தவர்களை மீட்கும் நோக்கில் இலங்கை கடற்படை கப்பல்கள் சம்பவ இடத்திற்குப் புறப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாதுகாப்பு அமைச்சின் அறிவிப்பின்படி, கடலில் விபத்துக்குள்ளான கப்பலை மீட்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கப்பலில் இருந்தவர்களின் நிலைமை குறித்து இதுவரை விரிவான தகவல்கள் வெளியாகவில்லை.

இதேவேளை, சம்பவம் தொடர்பாக தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சம்பவத்திற்கான காரணம் குறித்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தாதியர் சேவைப் பயிற்சிக்கு 2918 பேருக்கு...

2026-03-13 17:26:42
news-image

காலி சிறைச்சாலை கைதி தப்பியோட முயற்சி...

2026-03-13 17:25:47
news-image

அடுத்த 36 மணித்தியாலத்திற்கு பலத்த மழை...

2026-03-13 17:21:27
news-image

தாய்லாந்து பாராளுமன்றத்தை பார்வையிட்டார் சாணக்கியன் 

2026-03-13 16:58:41
news-image

இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி மற்றும் புதிய...

2026-03-13 16:21:12
news-image

தாய்லாந்தில் நடைபெற்ற திறந்த அரசாங்க கூட்டாண்மை...

2026-03-13 16:22:22
news-image

உள்நாட்டுக் கைத்தொழில்களை மேம்படுத்துவது அரசாங்கத்தின் முன்னுரிமையாகும்...

2026-03-13 16:14:27
news-image

மொழிசார் பாரம்பரியத்தைப் பாதுகாப்பது கலாசாரப் பொறுப்பு...

2026-03-13 17:29:59
news-image

இலங்கையில் 4-ல் ஒரு பங்கு மக்கள்...

2026-03-13 15:37:03
news-image

மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை –...

2026-03-13 14:38:04
news-image

‘தெமட்டகொட ருவான்’ பிணை விவகாரம்: 50...

2026-03-13 14:39:07
news-image

அமெரிக்கத் தாக்குதலில் உயிரிழந்த 84 ஈரானிய...

2026-03-13 14:17:14