கடவுச்சீட்டு மோசடி: இலங்கைப் பெண் இந்தியாவில் கைது

Published By: Digital Desk 3

04 Mar, 2026 | 09:47 AM
image

போலி ஆவணங்களைப் பயன்படுத்தி இந்திய கடவுச்சீட்டு பெற்று, அதன் ஊடாக இலங்கைக்கு வருகை தர முயன்ற 48 வயதுடைய இலங்கைப் பெண் ஒருவர் சென்னை மத்திய குற்றப்பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கையைச் சேர்ந்த குறித்த பெண் கடந்த 2015 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு சென்றுள்ளார். இந்தியப் பிரஜை ஒருவரைத் திருமணம் செய்த இவர், தஞ்சாவூர் மாவட்டத்தில் வசித்து வந்துள்ளார்.

இந்தியாவில் தங்கியிருந்த காலப்பகுதியில் சட்டவிரோதமாக ஆதார் அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை அவர் பெற்றுள்ளார். 

இந்த ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு, அவர் இந்திய கடவுச்சீட்டையும் பெற்றுக்கொண்டுள்ளார்.

இந்நிலையில், கடந்த மார்ச் 02ஆம் திகதி குறித்த கடவுச்சீட்டைப் பயன்படுத்தி சென்னை விமான நிலையத்தின் ஊடாக இலங்கைக்கைக்கு வருகை தர முயன்றபோது, வெளிநாட்டவர் பிராந்திய பதிவு அலுவலக அதிகாரிகளால் அவர் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்.

இந்திய மத்திய குற்றப்பிரிவின் கடவுச்சீட்டு மோசடி தடுப்புப் பிரிவினர் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

கடந்த மூன்று நாட்களுக்கு முன்னரும் இதேபோன்ற குற்றச்சாட்டில் மற்றொரு இலங்கைப் பெண் கைது செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மின்சார சபை ஊழியர்களை உடனடியாக பணிக்குத்...

2026-03-11 10:10:16
news-image

கஹத்துடுவ அதிவேக வீதியின் இடைமாறல் பகுதியில்...

2026-03-11 10:05:00
news-image

மத்திய கிழக்கு போர் பதற்றம் :...

2026-03-11 09:53:00
news-image

ஜிந்துப்பிட்டி துப்பாக்கிச் சூடு: குற்றவாளிகளுக்கு உதவிய...

2026-03-11 09:44:22
news-image

திட்வா சவாலை வெற்றிகொள்ளல்: 9 மாவட்டங்களில்...

2026-03-11 06:33:44
news-image

மக்களுக்கு வசதியான, பாதுகாப்பான, செயற்திறனான மற்றும்...

2026-03-11 06:31:06
news-image

ஜனாதிபதி அலுவலகத்தின் பழைய பாராளுமன்ற சபா...

2026-03-11 06:24:40
news-image

மத்திய கிழக்கில் வசிக்கும் உறவுகளை தொடர்புகொள்ள...

2026-03-11 06:13:51
news-image

பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு பிலிப்பைன்ஸில் 'ஷிரீன்...

2026-03-11 06:10:57
news-image

எரிபொருள் விநியோகத்தை தடையின்றி முன்னெடுப்பதற்காகவே விலை...

2026-03-11 06:06:15
news-image

விமான நிலையத்தில் 32 கோடி ரூபாவுக்கும்...

2026-03-11 06:03:11
news-image

ஈரானிய கப்பல்களுக்கு நல்லெண்ண விஜயத்துக்கான அழைப்பே...

2026-03-11 06:00:45