எரிபொருள் விநியோகத்தில் பாதிப்பு இல்லை - வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி

Published By: Vishnu

04 Mar, 2026 | 02:04 AM
image

( எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் அமைதியற்ற சூழலால் எரிபொருள் விநியோகத்துக்கு எவ்வித பாதிப்போ அல்லது  தாமதமோ ஏற்படாது. எரிபொருள் விநியோக கட்டமைப்பு தொடர்பில் அச்சமூட்டி மக்களை தவறாக வழிநடத்த வேண்டாம் என்று எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களிடம் கேட்டுக்கொள்கிறோம் என வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (3) நடைபெற்ற   அமர்வில் வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையின் போது  ஐக்கிய  மக்கள் சக்தியின்  பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 அங்கு அவர்  மேலும் உரையாற்றியதாவது,

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் அமைதியற்ற நிலைமையை அரசாங்கம்  என்ற ரீதியில் எம்மால் கட்டுப்படுத்த முடியாது. இருப்பினும் அதனால் ஏற்படும் பாதிப்புக்குள் மற்றும் நெருக்கடி நிலைமையை அரசாங்கம் என்ற ரீதியில்  முகாமைத்துவ செய்ய முடியும்.

எரிபொருள் விநியோகத்துக்கு எவ்வித பாதிப்போ  அல்லது தாமதமோ ஏற்படாது. நாட்டில் தற்போது எரிபொருள் விநியோகம் வழமைக்குத் திரும்பியுள்ளது.எரிபொருள் விநியோக கட்டமைப்பு  தொடர்பில்  அச்சமூட்டி மக்களை தவறாக  வழிநடத்த வேண்டாம் என்று எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களிடம் கேட்டுக்கொள்கிறோம்.

இறக்குமதி செய்யப்படும் மசகு  எண்ணெய் தொகையை சுத்திகரித்து அவற்றை களஞ்சியப்படுத்தி வைப்பதற்கான வசதிகள் போதுமானதாக இல்லை. திருகோணமலை  எண்ணெய் தாங்கிகளில் இலங்கைக்குச் சொந்தமான தாங்கிகள் முழுமையாக பயன்படுத்தப்படுகிறது. அப்பகுதியில் மேலதிகமாக இரண்டு எண்ணெய் தாங்கிகளை  நிர்மாணிப்பதற்கு உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை இந்தியாவுக்கு  வழங்காமலிருந்திருந்தால்  தேவைக்கு மேலதிகமான வகையில் எண்ணெய் தொகையை களஞ்சியப்படுத்தி வைக்க முடியும். ஆகவே விமர்சனங்களை மாத்திரம் முன்வைக்கும் எதிர்க்கட்சியினர் கடந்த காலங்களை பற்றி நினைத்துப் பார்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2026-08-14 06:42:08
news-image

ஆபத்தான வாகன ஓட்டம், வீதி விதிமீறல்களை...

2026-08-14 06:40:21
news-image

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் காரணமாக நாட்டின்...

2026-08-14 06:44:42
news-image

கொழும்பில் இந்தோனேஷிய கலாசார மண்டபம் திறப்பு

2026-08-14 06:48:31
news-image

தித்வா புயல் காரணமாகப் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை...

2026-08-14 06:24:31
news-image

மெகசின் சிறை வன்முறையில் திட்டமிட்ட தாக்குதல்;...

2026-08-14 06:20:00
news-image

ஜனாதிபதியின் மத நல்லிணக்கத்திற்கு தொல்லியல் திணைக்களம்...

2026-08-14 06:12:16
news-image

22ஆம் அரசியலமைப்புத் திருத்தத்தை பிரதம நீதியரசர்...

2026-08-14 06:07:43
news-image

எதிர்வரும் காலத்தில் கஞ்சிபானை இம்ரான் கைது...

2026-08-14 06:04:13
news-image

'நீதியின் ஓலம் - 2': தமிழினப்படுகொலைக்கு...

2026-08-14 05:57:08
news-image

மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் தொடர்பான ஐ.நா உபகுழுவின்...

2026-08-14 05:54:23
news-image

நாட்டில் விபத்துக்களில் சிகிக்கி 1,693 பேர்...

2026-08-14 04:47:02