இலங்கை ஊடக வல்லுநர் நிறுவனச் சட்ட வரைவு உருவாக்கம் - சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர்

Published By: Vishnu

04 Mar, 2026 | 02:00 AM
image

( எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

பிராந்திய ஊடகவியலாளர்களுக்கு கொடுக்க வேண்டிய நிலுவை கொடுப்பனவுகளை விரைவாகச் செலுத்துமாறு , அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம்  அனைத்து ஊடக நிறுவனத் தலைவர்களுக்கு எழுத்து மூலமாக  அறிவித்துள்ளார். ஊடகவியலாளர்களின் தொழில்துறை திறனை மேம்படுத்துவதற்கு  இலங்கை  பட்டய ஊடக  வல்லுநர்  நிறுவனம்  என்ற பெயரில் நிறுவனமொன்றை நிறுவுவதற்கு  இலங்கை ஊடக வல்லுநர்  நிறுவனச் சட்ட வரைவு தற்போது தயாரிக்கப்படுகிறது என சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (3) நடைபெற்ற அமர்வில் வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையின் போது  தேசிய  மக்கள் சக்தியின் மாத்தறை  மாவட்ட  பாராளுமன்ற உறுப்பினர் லால்  பிரேமநாத் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 அங்கு அவர்  மேலும் உரையாற்றியதாவது,

2025.12.31 ஆம் திகதி வரை செல்லுபடியாகும் வகையில்  876 பிராந்திய ஊடகவிலாளர்களுக்கு ஊடக அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. பிராந்திய  ஊடகவியலாளர்களுக்கான ஊடக செய்தி சேகரிப்பு  தொடர்பான கொடுப்பனவுகள்  சில ஊடக நிறுவனங்களால் தாமதமாக வழங்கப்படுகின்றன  என்று தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

பிராந்திய ஊடகவியலாளர்களுக்கு கொடுக்க வேண்டிய  நிலுவை  கொடுப்பனவுகளை விரைவாகச் செலுத்துமாறு , அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம்  அனைத்து ஊடக நிறுவனத் தலைவர்களுக்கு எழுத்து மூலமாக அறிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்களின் திறன்களை  மேம்படுத்துவதற்கு உயர்கல்வி உதவித்தொகை மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதற்காக 100 மில்லியன் ரூபா  2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.இந்த திட்டத்தை இந்த வருடத்துக்குள் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர்களின் தொழில்துறை திறனை மேம்படுத்துவதற்கு  இலங்கை  பட்டய ஊடக  வல்லுநர்  நிறுவனம்  என்ற பெயரில் நிறுவனமொன்றை நிறுவுவதற்கு  இலங்கை ஊடக வல்லுநர்  நிறுவனச் சட்ட வரைவு தற்போது தயாரிக்கப்படுகிறது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக...

2026-08-12 00:34:35
news-image

இலங்கையில் ஐ- போன் பயன்படுத்துவோருக்கு கவலை...

2026-08-12 00:28:07
news-image

மகாநாயக்க தேரர்களின் முக்கிய கடிதம் மாயம்...

2026-08-11 12:40:04
news-image

நீதிபதிகளின் பதவிக்கால நீடிப்பு தொடர்பான மகாநாயக்க...

2026-08-11 15:07:40
news-image

அரசியல் பழிவாங்களுக்கு பொலிஸ் திணைக்களம் பயன்படுத்தப்படுகிறது...

2026-08-11 15:06:43
news-image

சர்வாதிகார யுகத்தை உருவாக்குவதே அரசாங்கத்தின் முதன்மை...

2026-08-11 16:12:43
news-image

இந்தியாவிலிருந்து இலங்கை திரும்புவோருக்கு குடிவரவு ஒப்புதல்...

2026-08-11 17:08:28
news-image

நீதிபதிகளின் வயதெல்லை நீடிப்பு: மகாநாயக்க தேரர்களின்...

2026-08-11 17:07:04
news-image

பிரதம நீதியரசர், நீதிபதிகள் மீது எதிர்க்கட்சியினர்...

2026-08-11 17:37:53
news-image

குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்துக்கு பதிலாக...

2026-08-11 17:37:11
news-image

சிறைச்சாலை பாதுகாப்பிற்கு ஓய்வு பெற்ற இராணுவ...

2026-08-11 17:17:44
news-image

அரச அதிகாரிகளுக்கான கொடுப்பனவுகள் அடிப்படைச் சம்பளத்துடன்...

2026-08-11 17:47:45